11,000 போலி மதுபாட்டில்கள் பதுக்கிய திமுக பிரமுகர் கைது; இளைஞர் கொலையுடன் தொடர்புடையவரா என விசாரணை #dmk

திண்டுக்கல் அனுமந்தராயன்கோட்டையைச் சேர்ந்த ஸ்டீபன்(38) என்பவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைக்கும் 11 ஆயிரம் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும் தொடர்பு உள்ளது என்கின்றனர் கொலையான ஸ்டீபனின் உறவினர்கள்.

திண்டுக்கல் அருகே அனுமந்தராயன்கோட்டை பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் திண்டுக்கல் தாலுகா காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தருமத்துப்பட்டி சாலையில் உள்ள தோட்டத்து வீடு ஒன்றில் போலி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு நடத்திய சோதனையில் 234 பெட்டிகளில் இருந்த 11 ஆயிரத்து 232 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.