சென்னை, செப்டெம்பர், 28 – 2022

தமிழகத்தின் பல பகுதிகளில் ஆற்று மணல்கள் முறையற்ற வழிகளில் சூறையாடப்பட்டு வருகிறது தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடுவது நதிகளும் ஆறுகளும் தன் அடையாளத்தை தொலைத்துவிட்டு பொட்டல்வெளியாக காட்சி அளிக்கிறது அதனைப் பற்றி வேதனையுடன் ஓர் கண்டன அறிக்கையாக பதிவு செய்கிறது மக்கள் நீதி மய்யம்.

நதியைச் சூறையாடுவது பெருமையா? மணல் கடத்தலுக்கு துணைபோகும் திமுக எம்.பி. மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்! – மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் கண்டன அறிக்கை .

நாமக்கல் எம்.பி யான KNR ராஜேஷ் குமார் தமது கட்சிக்காரர் மத்தியில் பேசுகையில் மணல் அள்ளுவதற்கு (முறையற்ற வழிகளில்) தம் சொந்தக் கட்சிக்காரர்களை மட்டுமே அனுமதிப்பதாகவும் இதர கட்சி புள்ளிகளைப் போல் மூன்றாம் நபர்களிடம் அல்லது தனியார் நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு மணல் அள்ள ஒப்புக் கொள்வதில்லை என்றும் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பான வைரலாகி வந்தது.

இவ்வளவு தைரியமாக பட்டவர்த்தனமாக பேசும் இவருக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது ? விதிகளுக்குப் புறம்பாக ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் செய்யும் நபர்கள் என் கட்சிகாராரக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய முதல்வரின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த செயலை எப்படி தடுத்து நிருதப்போகிறார் முதல்வர் ?

இந்திய இறையாண்மையை, இயற்கையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஓர் பாராளுமன்ற உறுப்பினர் இது போல் சமூக அக்கறையின்றி முறையற்ற வழிகளில் மண் அள்ளுவதற்கு சொல்லியிருப்பதாக கூறுவது முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் பேசுவது ஜனநாயகத்தை மதிக்கும் எந்த சாமானிய நபரும் ஒப்புக்கொள்ள மாட்டார்.

கனிம வளத்திற்கென செயல்படும் ஓர் துறை மண் அள்ளுவதற்கு பல வழிமுறைகளையும் அதற்கான சட்ட திட்டங்களையும் வரையறை செய்து பணியாற்றி வருகிறது. இயற்கை வளங்களான மண், ஆற்று மணல், பாறை கற்களை உடைத்து எடுக்கும் குவாரிகள் என பலவற்றுக்கும் இயற்கைக்கு எந்த ஊறும் ஏற்படா வண்ணம் குறிப்பிட்ட அளவுகளில் முறையான அனுமதி பெற்று கொள்முதல் செய்துள்ளனர். ஆனால் அவற்றையெல்லாம் பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல் ஒரே ஒரு முறை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி விட்டு பின்பு காலவரையின்றி எந்த அளவுகோளுமின்றி நினைத்த மாத்திரத்தில் அடுக்கடுக்காய் இயற்கை வளங்களை சுரண்டி சுரண்டி வண்டி வண்டியாய் உள்ளூர் சந்தைகளில் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கடத்தி வருவது பல செய்தி தொலைக்காட்சிகளில் நேரலையாக காண்பிக்கப்பட்டது.

மேலும் இதனைப்பற்றி புலனாய்வு செய்தித் தொலைக்காட்சி ஒன்று மாவட்ட ஆட்சியரிடம் அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு எடுத்துரைத்த போது அந்த மாவட்ட ஆட்சியர் இந்நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாகிறது என்று தெரிந்ததும் பேசிக்கொண்டிருக்கும்போது தொடர்பை துண்டித்துவிட்டார்.

சட்டதிட்டங்களுட்பட்டு கனிமங்கள் உட்பட இயற்கை வளங்களை நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே தோண்டப்பட்டு எடுக்கவும் அதற்கும் முறையான அனுமதி பெற்று மட்டுமே குவாரிகள் எதுவாக இருப்பினும் செயல்படவேண்டும். அவை மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்ந்து கண்கானிக்கபடவேண்டும். பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து இயங்கும் அரசு அதனதன் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு ஊதியமாக தந்து வருகிறது. எனவே இதை மனதில் கொண்டு இயற்கை வளங்கள் அனைத்தும் அரசின் சொத்துக்களாக பாதுகாக்கப்பட வேண்டும் என தங்கள் மனதில் இருந்திக் கொண்டு துறை அதிகாரிகள் அனைவரும் பொறுப்புடனும் கடமை தவறாத கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

இப்படி அளவிற்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு ஆற்றின் அழிவிற்கு காரணமாகவும் அமையும் இந்த இயற்கை வளங்களை சூறையாடிக் கொண்டே வருதல் வருங்கால சந்ததிகளுக்கு பேரழிவைத் தரும் இயற்கைச் சீற்றங்கள் அபாயமும் உண்டாகும்.

இயற்கையை பாதுகாக்கவும் சட்ட விரோதமாக மணல் மற்றும் வளங்களை எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் எம்பி ஒருவர் இப்படிப்பட்ட முறைகேடான செயலை செய்வதற்கு அனுமதி அளிப்பதை கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கப் போகிறாரா நம் தமிழக முதல்வர் ?

தமிழகத்தில் நடந்து வரும் மணல் கொள்ளையினை பற்றிய செய்திகள் (தமிழ் & ஆங்கிலம்)

https://www.hindutamil.in/news/tamilnadu/861299-river-sand-quarries-should-be-closed-to-protect-groundwater-resources-anbumani-ramadoss-insists.html

https://tamil.asianetnews.com/politics/anbumani-insisted-that-the-tamil-nadu-government-should-take-action-to-curb-sand-robbery-rhq124

https://indianexpress.com/article/cities/chennai/tamil-nadu-illegal-sand-mining-dvac-madras-hc-7780842/

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2022/aug/12/illegal-sand-mining-then-penniyar-river-activist-urges-puducherry-l-g-to-look-into-it-2486616.html

தமிழகத்தில் நடந்துவரும் மணல் கொள்ளை பற்றி NDTV யின் தொகுப்பு கீழே

https://www.ndtv.com/topic/tamil-nadu-sand-mafia