ஆட்சி ஏற்ற புதிதில் அடக்கி வாசித்த திமுக அமைச்சர்கள் தற்போதெல்லாம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி சர்ச்சையை உண்டாக்கி வருகிறார்கள். அவை மட்டுமல்லாமல் தங்களைச் சந்தித்து கோரிக்கைகள் எழுப்பிய மனுக்களை தரும் சில அரசு சாரா அமைப்புகள் மற்றும் சங்கங்கள் சார்ந்த பிரதிநிதிகளை பொதுமக்களை மரியாதைக் குறைவாக நிற்கவைத்து சற்றும் பொறுப்பில்லாமல் சமூக பிரக்ஞையுமில்லாமல் அவர்களின் அடிப்படைத் தேவைகள் கொண்ட கோரிக்கைகளா என எதையும் முழுதாக தெரிந்து கொள்ளாமல் அல்லது அந்த மனுக்களின் சாராம்சம் என்னவென்று கூட அறிய முற்படாமல் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளை மனம் வேதனை கொள்ளும்படி திரும்ப அனுப்பிவைப்பது என கொஞ்சமும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள்.

மனு கொடுத்த பெண்மணியை அதே காகித தாள்களினால் அடித்த அமைச்சரான சாத்தூர் ராமச்சந்திரன் என்றழைக்கப்படும் KKSSR. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறவர் சமூகத்தை சார்ந்த பிரதிநிதியை சந்தித்து மனுவை பெற்றுக் கொண்ட போது நிகழ்ந்த சம்பவங்கள் உங்களை நிச்சயம் வருத்தம் கொள்ள வைக்கும்.

சம்பந்தப்பட்ட அந்த பிரதிநிதி “தான் ராஜபாளையம் மலையடிபட்டு எனும் கிராமத்தில் இருந்து குறவர் சமூகத்தை சார்ந்த ஒரு கட்சி அமைப்பின் பிரதிநிதியாக வந்துள்ளேன் என்றும் கோரிக்கைகளை ஆய்வு செய்து நிறைவேற்றி தரும்படி அரசின் கவனத்தை ஈர்க்கும்படியான உண்ணாவிரதப் போராட்டம் சுமார் 7 நாட்களாக தொடர்ச்சியாக நடந்துள்ளது இது தொடர்பாக உங்களைப் பார்த்துச் செல்லவும் பின்னர் முதல்வர் அவர்களையும் பார்க்க முயற்சி செய்வதாக சொன்னதாகவும் விவரித்த அவர், மேலும் அந்த வரவேற்பறையில் காலியாக பல நாற்காலிகள் இருந்தும் அமைச்சர் ஏனோ அமர வைக்காமல் பேசினார். அது மட்டுமல்லாமல் தன்னை அருகிலே வரக்கூடாது என்றும் தள்ளி நிற்க வேண்டும் எனச் சொன்னதாகவும் குறிப்பிடும், மேலும் முதலமைச்சர் ஒன்றும் நீங்கள் சுலபமாக சந்திக்கக்கூடிய நபரல்ல என்றும் கூறியவர் அம்மனுவை முழுதுமாக படிக்கக் கூடாமல் எங்களை அங்கே இருக்க விடாமல் அனுப்புவதிலேயே குறியாக இருந்ததாக குறிப்பிடும் அவர் தன்னுடன் வந்திருந்த 13 பேரையும் அமர வைக்காமல் புறக்கணித்து பேசியது தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் மிகப் பெரும் மன உளைச்சலைத் தந்ததாக சொல்லும் அவர் தான் சார்ந்திருந்த மொத்த சமூகத்தையும் அமைச்சர் அவமதித்துள்ளார் என்றும் வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது எப்படி என்றால் அமைச்சர் KKSSR நவீன தீண்டாமையை கடைபிடிக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.

பெரியார் கொள்கைகள் தான் எங்கள் தாரக மந்திரம், அயராத மக்கள் பணி, அனைவருக்கும் சம உரிமைகள், சமூக நீதியை போற்றும் ஒரே கட்சி எங்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் அது மட்டுமில்லாமல் திராவிட மாடல் ஆட்சியே மற்ற மாநிலங்களில் ஆட்சி செய்ய முன்னுதாரணமாக திகழ்கிறது என்று மார் தட்டிக்கொள்ளும் நம் தமிழக முதல்வர் எண்ணிக்கையில் மட்டும் தன்னை நெம்பர் 1 ஆக வைத்துக் கொள்வதும் இது போன்ற எளிய மக்களிடம் தமது அமைச்சரவையில் மிகப்பெரும் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்களை அவரவர் விருப்பத்திற்கு நடந்து கொள்ளும்படி விட்டு வைத்திருப்பது தான் மிகச்சிறந்த அணுகுமுறை என்பதோ ?

https://www.vikatan.com/government-and-politics/politics/rajapalayam-vana-vengai-political-party-issue-and-kkssr-explanation

https://tamil.oneindia.com/news/chennai/complaint-against-tamil-nadu-minister-kkssr-ramachandran-in-dgp-office-477957.html