சென்னை – அக்டோபர் 01 – 2022

நடப்பாண்டு 2022 சனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு பச்சரிசி, பருப்பு, முந்திரி, காய்ந்த திராட்சை, எண்ணை, மண்ட வெல்லம் மற்றும் கரும்பு துண்டு உட்பட பல பொருட்களை கொண்ட பரிசுத் தொகுப்பினை இலவசமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (ரேஷன் எனும் நியாய விலைக்கடைகள்) மூலமாக விநியோகம் செய்யப்பட்டது.

அப்படி விநியோகம் செய்யப்பட்ட ரவை, மண்ட வெல்லம் போன்ற சில பொருட்களை வடமாநிலங்களில் உள்ள தனியார் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது பெரும் விமரிசனத்திற்கு உள்ளானது. ரவையில் வண்டுகளும் பூச்சிகளும் மண்டவெல்லம் உதிரிரியாகவும் மட்டுமல்லாமல் உருகிவிடும் தன்மையில் பிசுபிசுப்பாகவும் தரமற்றதாகவும் காணப்பட்டதாக தமிழகம் முழுக்க பரவலாக புகார்கள் எழுப்பப்பட்டது. சமூக வலைதளங்களில் செய்திகளிலும் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே இதை தன் கவனத்திற்கு எடுத்துக் கொண்ட தமிழக முதல்வர் இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை செய்து தரமற்ற பொருட்களை விநியோகம் செய்த நிறுவனங்களையும் அவற்றை தகுந்த முறையில் பரிசோதனை செய்யாமல் கடமையை தவறிய அதிகார்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து மேற்படி தரமற்ற பொருட்களை விநியோகம் செய்த 6 நிறுவங்களின் மீது புகார் பதிவு செய்து தண்டனையாக 3.75 கோடி ரூபாய் அபராதமாக செலுத்தவேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. அதிலும் குறிப்பாக 3 நிறுவனங்களுக்கு 2.5 கோடி ரூபாய்கள் அபராதமாக விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இப்படி இருக்கும் போது தரமற்ற பொருட்களை விநியோகம் செய்த சில நிறுவனத்திடமே மீண்டும் சில ரேஷன் பொருட்களை விநியோகம் செய்திட தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கும் துறை ஒப்பந்தம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தரமற்ற பொருட்களை விநியோகம் செய்ததால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களிடமே மீண்டும் பரிமாற்றம் செய்வது எப்படி முறையாகும் ? மேலும் தவறு செய்த நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே சரியான தீர்வு. அது மட்டுமல்லாமல் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.

இது பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகப்பிரிவு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்த நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் இணைக்க ஆணையிட்ட முதல்வர் அதனை பற்றிய பத்திரிகைச் செய்தி (கீழே)

https://mdnews.live/tamil/mess-in-pongal-gift-distribution-in-tamil-nadu-strict-action-against-wrongdoers-chief-minister-orders-blacklisting-of-companies-that-supply-substandard-goods

https://www.hindutamil.in/news/tamilnadu/760415-aiadmk-files-case-in-madras-high-court-seeking-cbi-probe-into-rs-500-crore-scam-in-pongal-gift-package.html