சென்னை அக்டோபர் 07, 2022

ஆசிரியர்களுக்கான TET தகுதித் தேர்வில் பங்கு பெற்று தேர்வான பல்லாயிரக்கணக்கான நபர்கள் பணி நியமனத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் (வாக்குறுதி எண்:117) ஆசிரியர் பணிகளை நியமனம் செய்வோம் என்றும் காத்திருப்போர் பட்டியலில் நீண்ட கால அளவின் படி அவர்களின் வயதையும் கருத்தில் கொண்டு நியமனங்கள் இருக்க வழி செய்வோம் என்று வாக்களித்தனர்.

திமுக ஆட்சிக்கு வந்து 17 மாதங்களை கடந்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியர்களை நியமிக்க எந்த முயற்சியும் இதுவரை செய்யாமல் காலம் கடத்தி வருகிறார்கள் என்று வேதனையில் இருந்த TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டத்தினை கையில் எடுத்தனர். அதன்படி அக்டோபர் 03 ஆம் தேதி வள்ளுவர் கோட்டம் அருகில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் காத்திருக்கும் நியமனமும், தேர்ச்சி பெற்ற பின்னரும் மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற (GO 149) ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டு கோஷம் எழுப்பப்பட்டது.

ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து முன்னெடுத்த இப்போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் அவர்களுக்கு ஆதரவாக பங்கெடுத்துக் கொண்டது. மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார். பணி நியமனம் செய்யப்படாமல் காத்திருக்கும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளையும் வேண்டுகோள்களையும் திமுக அரசு செவிமடுக்க வேண்டும் என்றும் தங்களின் வாதங்களை TET ஆசிரியர்களின் சார்பாக வலியுறுத்தி மேலும் இப்போராட்டம் சரியான தீர்வை எட்டும்வரை நடக்கும் அறவழி போராட்டம் எதிலும் அதற்கு எப்போதும் மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும் என உறுதியளித்தனர்.

எப்போதும் திமுக அரசு ஊழியர்களின் ஆதரவாளன் என்றும் ஆபத்பாந்தவன் என்றும் ஓர் பிம்பத்தை கட்டமைத்து வைத்துள்ளது என்பது இலைமறைகாயாக தெரியும். தேர்தல் நெருங்கும்போது சட சடவென பொழியும் மழை போல் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படும். அவகளை நிறைவேற்ற முடியுமா என்றும் கூட சிறிதும் யோசிக்காமல் பக்கம் பக்கமாக அறிக்கையும் வெளியாகும். அப்போது ஆளும் கட்சியை விமர்சித்து மேடைகள் தோறும் முழங்குவார்கள் திமுகவின் முன்னணித் தலைவர்கள் பலர். இறுதியாக தேர்தல் நடைபெற்று திமுக ஆட்சி அமைந்ததும் தான் துவங்கும் அவர்களின் அசல் முகம். உதாரணத்திற்கு 20 வாக்குறுதிகள் அளிக்கிறார்கள் எனில் அவற்றில் இரண்டோ அல்லது மூன்றோ என ஒற்றை எண்ணிகையில் மட்டுமே நிறைவேற்றி தருவார்கள். அப்படி கூட சமீபத்தில் முதல் தலைமையில் நடைபெற்ற அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ ஜியோ மாநாட்டில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் முதல்வர் பேசிகொண்டிருக்கும் போதே மாநாடு நடைபெற்றுகொண்டிருந்த அரங்கை விட்டு வெளியேறத் துவங்கினார்கள்.

தமிழகத்தில் 2831 அங்கன்வாடி மையங்கள் மூடப்படும் என அரசு அறிவித்தது. பொதுவாக கிராமப்புறங்களில் அங்கன்வாடி மையங்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு. அதனால் மூடப்படும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து அதற்கு எதிராக கடுமையாக தமது எதிர்ப்புகளை காண்பிக்கத் தொடங்கிய பின்னர் சற்று பின்வாங்கிய அரசு இப்போது அந்த அங்கன்வாடிகளுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிக்கபடுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் TET தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சுமார் 8000 பேர்கள் காத்திருக்கும்போது அங்கன்வாடிகளுக்கு நிரந்தரமற்ற தற்காலிகமாக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ன நியாயம் ?

ஏற்கனவே பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படாமல் பற்றாக்குறை இருக்கும் இத்தருணங்களில் வெறும் 5000 ரூபாய் தொகுப்பூதிய விகிதத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டால் பொருளாதார சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் நிலை உண்டாகாதா ? அப்படி நியமனம் செய்யப்பெற்ற ஆசிரியர்கள் மன அழுத்தத்தில் பணி புரிந்தால் அவர்களை நம்பி கல்வி பயில வரும் மாணவர்களின் எதிர்காலம் என்னாவது ?

சென்னை நகரத்தின் மிக முக்கிய பகுதிகளில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் பல பள்ளிகளில் போதுமான அளவிற்கு ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை என்றும் ஓர் பேச்சு உலவுகிறது.

தங்கள் கட்சியின் தலைவரும் 5 முறை முதல்வராக ஆட்சி செய்தும், பேசுவதிலும், எழுதுவதிலும் தனித்திறமை பெற்ற தம் தலைவரின் நினைவாக அவரது நினைவகம் (சமாதி) அருகில் அலைகடலின் நடுவே 94 அடி உயர பேனாவை சிலையாக வைத்துக் கொள்ள உத்தேசிக்கும் திமுக திராவிட மாடல் அல்ல அது வெற்று பிம்பத்தை கட்டமைக்கும் அட்டைக் கத்தி மாடலே !

இதே போல இதற்கு முன்னர் தற்காலிக ஆசிரியர்களை நியமித்தல் தொடர்பாக தனது கண்டனங்களை தெரிவித்தது மக்கள் நீதி மய்யம் அதன் விபரம் கீழே