சென்னை நவம்பர் ௦3, 2022

சுமார் 26 வருடங்களாக தேவைப்படும்போது கிராம சபையை நடத்தி வந்தது என்றாலும் அதற்கு இணையாக கூட்டங்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறவில்லை. இதனை சீர் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு ஏரியா சபை மற்றும் வார்டு சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று 2௦1௦ இல் ஒரு சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. சட்டதிருத்தம் செய்த திமுக அரசே அப்போது தாங்கள் ஆட்சி செய்த காலத்திலும் விதித்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதன் பிறகு 2௦11 ஆண்டில் அதிமுக ஆட்சியை அமைத்த போதிருந்து கடந்த 2௦21 ஆண்டு வரை கூட அவர்கள் ஏரியா சபை மற்றும் வார்டு சபை கூட்டங்கள் நடத்தவில்லை.

2௦18 மக்கள் நீதி மய்யம் துவக்கப்பட்டது முதல் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மேற்குறிப்பிட்ட இரண்டு சபைகளையும் தவிர்க்கப்படாமல் நடத்த வேண்டும் என்றும் தவறாமல் வலியுறுத்தி வந்தது ம.நீ.ம மட்டுமே.

இதற்கான முன்னெடுப்பாக தலைவர் அவர்களால் சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் மாதிரி ஏரியா சபை ஒன்றை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அப்போது இது குறித்து சென்னை கோட்டையில் அப்போதைய தலைமைச் செயலரை சந்தித்து நகர சபை மற்றும் ஏரியா சபைகளை நடத்திட ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தலைவரைத் தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆட்சியரை சந்தித்து இது குறித்து மனுக்களை அளித்தனர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள். இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் அன்று இதற்கான நகர்வுகளாக இச்சட்டத்தினை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை அறிவித்தது. ஒரு குறிப்பிட்ட வார்டை பல பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் வார்டு சபை நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன் விதிமுறைகளை அறிவித்ததன் தொடர்ச்சியாக நவம்பர் ௦1 2௦22 அன்று வார்டு சபைகள் நடத்தப்படும் எனும் தமிழக அரசின் அறிவிப்பினை வரவேற்றது ம.நீ.ம அறிக்கை மூலமாக வாழ்த்துகளையும் தெரிவித்தது.

இக்கூட்டங்களாவது அரசின் நிர்வாகத்தில் மக்களின் உரிமைகளையும் பங்கினையும் அதிகபடுத்தி ஜனநாயகத்தின் வலிமையை உணரச்செய்யும்படி அமையும் என நம்பிய ம.நீ,ம வார்டு சபை நடைபெற்ற நவம்பர் ௦1 தேதியன்று பல பகுதிகளில் நடத்தப்பட்ட வார்டு சபைகளில் அப்பட்டமான விதிமீறல்கள் பலவற்றை கண்டு அதிர்ச்சியில் நின்றது என்றால் அது பொய்யில்லை. ஆட்சி செய்யும் கோட்டை இருக்கும் சென்னை மாநகரத்தில் எந்த வார்டு சபைகளும் நடத்தப்படவில்லை மேலும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கூட்டங்களில் அப்பட்டமாக அது திமுகவின் கட்சி விழாவினைப் போலவே பல நாடகங்கள் அரங்கேறியது வெளிச்சத்திற்கு வந்தது.

தாம்பரம் நகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர் அமைச்சர் நேரு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் TR பாலு ஆகியோர். அப்போது அவர்கள் முன்னிலையில் மாணவர் ஒருவர் எழுதிக்கொண்டு வந்த கவிதையில் திமுகவின் தலைவரை வானளாவ புகழ்ந்ததும் அதற்கு மேற்கண்ட இருவரும் புளங்காகிதம் அடைந்து வாய் நிறைய பாராட்டியும் ஏதோ கவிகள் பாடும் மன்றத்திற்கு தலைமையேற்றது போல் மகிழ்ந்தனர். இது நகர சபையா அல்லது சொந்தக் கட்சியின் மூலம் நடத்தப்பட்ட தற்பெருமை புகழ்ந்த நாடக சபையா என கண்ணுற வேண்டியுள்ளது.

வார்டு கவுன்சிலர் தலைமையேற்று நடத்தப்படவேண்டும் எனும் முக்கிய விதிகளையே ஒதுக்கித் தள்ளியவர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்தியவர்கள் MLA & MP -க்களும் தான். இது போன்ற பல விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டனர் அவற்றில் சில : நிதிநிலை அறிக்கைகள் வாசிக்கப்படவில்லை, முறையாக இயற்ற்றப்படாத தீர்மானங்கள் என பல குறைகள் இருந்தாலும் பல்வேறு இடங்களில் பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளையும் தங்களின் கடமைகளையும் உணரத் துவங்கி இருப்பதைக் கண்டு இச்சட்டத்தினை கொண்டு வர வேண்டி பலமுறைகள் வலியுறுத்தி வந்த தலைவரும் & மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர்.

12 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த வார்டு சபைகள் இனி ஒவ்வொரு வருடமும் நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் தொடர்ந்து நடைபெறவேண்டும் அதிலும் இனி வரும் கூட்டங்களில் இதைப் போன்ற எந்த விதிமீறல்களும் நடைபெறாமல் இந்திய நாட்டின் ஜனநாயக முறை காக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறது ம.நீ.ம

நடந்தது நகர சபையா?; நாடக சபையா?: மக்கள் நீதி மய்யம் கண்டனம் | Dinamalar

city council or drama council makkal nithi mayyam condemns (minnambalam.com)

நடந்தது நகர சபையா? அல்லது திமுகவின் நாடக சபையா? மநீம அறிக்கை! (malaimurasu.com)

City Council Meetings, நடந்தது நகர சபையா? நாடக சபையா..? – மக்கள் நீதி மய்யம் கண்டனம்! – makkal needhi maiam condemned the fact that city council meetings in tamil nadu were held like party meetings – Samayam Tamil