நாமக்கல் – செப்டெம்பர் 27 – 2022

திமுக வின் நாமக்கல் மாவட்ட (கிழக்கு) பொறுப்பாளராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகிக்கும் ராஜேஷ் குமார் தமது கட்சிக்காரர்களிடம் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

அப்படியென்ன பேசியுள்ளார் அதில் ?

தனது பொறுப்பில் உள்ள மாவட்டத்தில் உள்ள தனது கட்சிக்காரர்களை மட்டும் மண் (மணல்) அள்ள அனுமதி கொடுத்ததாகவும் மற்ற திமுக புள்ளிகள் வேறு வேறு கம்பெனிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு மண் அள்ள அனுமதி கொடுத்து விட்டதாகவும் பேசி உள்ளார். அதாவது சட்ட விரோதமாக மண் அள்ளுவதே தவறு ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் அதையும் தனது கட்சி நபர்களிடம் மட்டுமே அளிப்பதாக கூறும் இவர் மாநிலங்களவையின் உறுப்பினர்.

பணம் மட்டுமே முக்கியம் என கருதும் இவர்கள் மக்களுக்காக எங்கே எப்படி பேசுவார்கள். கொட்டிக்கிடக்கும் இயற்கையை அதன் அடிமடி வரை கிண்டி கீறி டன் கணக்கில் முறையான அனுமதி இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக மணல் திருட்டை செய்து வரும் இவர்களால் நாட்டுக்கு என்ன நன்மை நிகழ்ந்து விடப்போகிறது.

இதையெல்லாம் பார்த்துகொண்டு இன்னும் எத்தனை காலம் தான் முதல்வர் மவுனம் சாதிப்பார் ? ஆட்சி ஏற்ற புதிதில் சென்ற அதிமுகவின் ஆட்சி போல் அல்லாமல் உண்மைக்குப் புறம்பாகவும் கழகத்திற்கு களங்கம் உண்டாக்க கூடிய வகையில் எனது தலைமையில் உள்ள திமுகவில் எவரும் சட்டத்திற்கு புறம்பாக எந்த செயலைச் செய்தாலும் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் அவர்கள் மீது எனது இரும்புக்கரம் நீளும் தண்டனைகள் கடுமையாக இருக்கக்கூடும் என்றார். இந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன தெரிந்தும் உணர்தும் தான் முதல்வர் அவர்கள் பேசி இருப்பார்.

பார்க்கலாம் அவருடைய இரும்புக்கரங்கள் நீள்கிறதா என.