சென்னை – செப்டெம்பர் 27, 2022

தொடர்ச்சியாக கிடைக்கும் பண்டிகை கால விடுமுறைகள் எனில் சென்னையில் வசித்துவரும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விடுமுறை சரியான காலங்களில் கிடைக்கப் பெறும் என எந்த உத்திரவாதமும் இல்லாததால் ரயில் மூலமாக செல்ல முன்கூட்டியே பதிவு செய்ய இயலாது மேலும் ரயிலில் பயணம் செய்வதை விட பலர் கிடைத்த நேரத்தில் கிளம்பி பேருந்துகளில் சென்றுவிடலாம் என பல மாவட்டங்களுக்கு புறப்படும் பேருந்து நிலையத்தை அடைந்தால் அங்கே அரசு பேருந்துகளில் பயணச்சீட்டு கிடைக்கப் பெறாமல் தனியார் பேருந்துகளான ஆம்னி சர்வீஸ்களில் பயணம் மேற்கொள்ள டிக்கெட் எடுக்க முற்படுகையில் அங்கே தான் அவர்களுக்கு எதிர்பாரா அதிர்ச்சி காத்துக் கிடக்கும். உதாரணமாக சென்னை முதல் மதுரை வரை செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் சுமார் 700 ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் பண்டிகை காலங்களில் இந்த தொகை நான்கு மடங்குகளாக 2800 வரை அடாவடியாக கேட்பார்கள் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டால் விருப்பம் இருந்தால் வாங்க இல்லையெனில் இங்கிருந்து செல்லுங்கள் என உதாசீனமாக சொல்லும் வழக்கும் உண்டு.

ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் தரும் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படமாட்டாது அதிலும் தனியார் ஆம்னி பஸ் கட்டணங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அதை ஒருபோதும் கவனிக்க மாட்டார்கள்.

அப்படிதான் இப்போதுள்ள தனியார் ஆம்னி பேருந்துகள் எல்லா செலவுகளும் போக லாபமாக கிடைக்கும் தொகையை விட பன்மடங்கு கட்டணமாக அடாவடியாக ஒவ்வொரு பயணியிடமும் வசூல் செய்துவருகிறார்கள். ஊருக்கு சென்றே ஆகவேண்டும் என்கிற சூழ்நிலையில் உள்ள பயணியும் வேறு வழியின்றி பன்மடங்கு அதிக தொகையை கட்டணமாக செலுத்தி மனதுக்குள் புழுங்கி வெம்பி பயணம் செய்து சொந்த ஊருக்குச் சென்று சேர்கிறார்கள்.

இதையெல்லாம் கட்டுப்பாடு செய்து வைக்க வேண்டிய தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சரான சக்கரபாணி இன்றைக்கு அருமையான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் இருந்து சில சொற்களைத் தான் நீங்கள் இந்தக் கட்டுரையின் தலைப்பின் துவக்கத்தில் கண்டது.

அடிப்படையாக ஏழை எளிய மக்களுக்கான சேவையை வழங்க வேண்டியது தான் அரசுடைய கடமை அந்த வகையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் எல்லா கிராமங்களுக்கும் பேருந்து வசதியை தரும் மாநிலம் தமிழ்நாடு அதே போல் இரவு நேரங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதும் தமிழகத்தில் தான் குறைவான கட்டணத்தை கொண்ட பேருந்து சேவையை சுற்றிலும் இருக்ககூடிய மாநிலங்களில் ஒப்பிட்டு பார்த்தால் அது கர்நாடக மாநிலமோ அல்லது கேரளா, ஆந்திரா என எந்த மாநிலமாக இருந்தாலும் குறைவான கட்டணத்தில் பேருந்து சேவையை அளிப்பது தமிழ்நாடு தான் எனவே ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்களுக்கான சேவையை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம் கூடுதல் சேவையை நாடுபவர்கள் ஆம்னி பேருந்தை நாடிச் செல்கிறார்கள். ஆயினும் அரசு பேருந்துகளிலும் இது போன்ற ஸ்லீப்பர் மற்றும் AC பேருந்துகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணங்களை அவர்களுக்குள் நிர்ணயம் செய்து கொண்டால் அதைத் தாண்டி கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்றால் அதைப்பற்றி எங்களின் கவனத்திற்கு வந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களுடைய சங்கங்களுக்கு அறிவித்துள்ளோம். அரசு பேருந்துக்கு தனியார் பேருந்துக்கு கட்டண நிர்ணயம் இருக்கிறது உங்களுக்கு தெளிவா புரியுது ஒப்பந்த வாகனத்திற்கு கட்டண நிர்ணயம் கிடையாது இது தமிழ்நாடு மாத்திரமல்ல இந்தியா முழுமைக்கும் இருப்பது இருந்தாலும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று அவர்களிடத்தில் கேட்டிருக்கிறோம் இது பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் தான் இரண்டு மணி நேரத்திற்கு பேசி இருக்கிறோம் போக்குவரத்துத் துறை ஆணையர், அதிகாரிகள் அந்த தொழிலதிபர்கள் என எல்லோரும் அமர்ந்து பேசுகிறோம் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பது என்று தான் மேலும் 21000 அரசு பேருந்துகள் ஓடுகிறது மக்களுக்கான முழுமையான சர்வீஸ் கொடுக்கபடுகிறது என்றும் அதையும் மீறி தனியார் பேருந்துகளை நாடிச் செல்லும் மக்களைப் பற்றி தான் அப்படி ஒரு கருத்தை சொன்னேன் என்று சொன்னார் தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சரான SS சிவசங்கர் அவர்கள்.

அவசர காலத்தில் ஊர்களுக்கு செல்ல விருப்பம் கொள்ளும் மக்கள் பேருந்தின் மூலமாக பயணம் மேற்கொள்ளக் கூடும் அவர்களில் சிலர் வேறு வழியின்றி தனியார் ஆம்னி பஸ்கள் மூலம் செல்ல நேரிடும் அவர்களை குறிப்பிடும் அமைச்சர் இதனால் அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது என்று சொல்வது எவ்வளவு குறுகிய பார்வையுடையது என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வளவு பொறுப்பற்ற வகையில் பேசுவதற்காகவா இவர்களை தேர்வு செய்தார்கள் மக்கள் ?