தலைவர் பிறந்த நாள் முன்னிட்டு துணைத்தலைவர் தங்கவேலு அவர்களின் ஆலோசனையின் பேரில், கோவை தெற்கு தொகுதி 70 ஆவது வார்டு பாலசுப்ரமணியம் நகரில் கோவை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, அதனை காணொளி காட்சி மூலம் தலைவர் கமல் ஹாஸன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்க கோவை மண்டல செயலாளர் ரங்கநாதன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

மாவட்ட செயலாளர் பிரபு முன்னிலையில் மற்ற மய்யம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.