நம்மவரின் ஐயமிட்டு உண் திட்டத்தின் முதல் நாள் 01-11-2021 கோவை வடமேற்கு மாவட்டத்தின் சார்பாக GILGAL MINISTRIES TRUST PEELAMEDU முதியோர் காப்பகத்தில் நம்மவர் அவர்களுக்கு பிறந்தநாள் கேக் வெட்டி மதிய உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த இனிய நிகழ்வு மாவட்டச் செயலாளர் எம்.தம்புராஜ் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் பி மனோகரன், ராஜசேகரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி நிர்மலா,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிக்கந்தர் பாட்சா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் விஜய் சரவணன்,நற்பணி இயக்க அணி அமைப்பாளர் விக்டர் டேவிட், நகரச் செயலாளர்கள் சிவக்குமார், மெல்வின் வார்டு செயலாளர்கள் ரமேஷ், பிருந்தா மற்றும் மய்ய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.