மக்கள் நீதி மய்யம், கோவை வடமேற்கு மாவட்டம், மாவட்ட செயலாளர் எம் தம்புராஜ் அவர்களின் ஆலோசனையின்படி, மாணவரணி சார்பில் தலைவர் கமல்ஹாசன் அவர்களது 67வது பிறந்தநாள் நற்பணியாக மாணவரணி அமைப்பாளர் திரு தனுஷ் அவர்கள் தலைமையில் 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு கோவை அரசு மருத்துவமனையில் ரத்த வங்கியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நமது மக்கள் நீதி மய்யத்தைச் சார்ந்த 38 பேர் தங்களது ரத்தத்தை கொடையாக வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவரணி செயலாளர் திரு ராகேஷ் R ஷம்ஷேர், மகளிர் அணி மண்டல செயலாளர் திருமதி அருணா, ரம்யா ஆகியோர் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தனர். உடன் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மனோகரன், சசிக்குமார், சிக்கந்தர், விக்ட்டர் டேவிட், விஜய் சரவணன், நிர்மலா, மெல்வின், பனித்துளி, சுரேந்திரன் மற்றும் மய்ய நண்பர்கள் பலர்.