ஒவ்வொரு நிதியாண்டும் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளில் தங்கள் வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்தும் இதர பரிமாற்றங்களை, மாத ஊதியம் உள்ளிட்ட வரவு செலவு கணக்குகளை வருமான வரி அலுவலகம் தனில் (Income Tax Department) தாமாகவோ அல்லது இந்திய வருமான வரி துறையால் அங்கீகரிக்கப்பட்ட பட்டயக்கணக்கர்கள் (Chartered Accountants-CA) மூலம் தணிக்கை செய்யப்பட்டு கணினி வழியாக ஆன்லைன்-ல் (Online) தாக்கல் செய்யப்பட வேண்டும், அப்படி அவர்களால் (CA) தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றால் அதற்கான சேவைத் தொகையாக அவர்கள் பெற்றுக் கொள்வதுண்டு.
அப்படி வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மத்திய மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெரும் பயனாளர்கள் என சென்ற நிதியாண்டின் (2020-21) வருமான வரி கணக்குகளை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக தாக்கல் செய்து தரும் சிறப்பு முகாம் ஒன்றினை சென்னை அம்பத்தூர் பகுதி மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் திரு ஆவடி A பாபு அவர்கள் தலைமையில், மய்யம் நகர செயலாளர்கள் ஏற்பாடு செய்து உள்ளனர்.