கோவை மாநகரில் 04.12.2021 அன்று கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் ஆங்காங்கே தேங்கிய வெள்ளம்.
மண்ணின் மைந்தரான முன்னாள் அமைச்சரும் இந்நாள் தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என கோலோச்சி வரும் SP.வேலுமணி (அ.தி.மு.க), மேலும் கடந்த இரண்டு மாதங்களாக கோவையில் முகாமிட்டு உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு வரும் உயர்திரு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி என ஆண்ட ஆளும் இருபெரும் கழகங்களின் பெரும்புள்ளிகள் இருந்தும் ஒரு துரும்பும் அசையவில்லை. இத்தனை ஆண்டுகளாக ஒவ்வொரு மழை பொழிவிலும் மாநகரின் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது. ஒரே நாள் பெய்த மழையில் மூழ்கிய சாலைகள், தெருக்கள் என எங்கும் வெள்ளக்காடாக காட்சி தரும் கோவை நகர மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள்.
இது நாள் வரை பொதுப்பணித்துறை மற்றும் மழைநீர் வடிகால் வாரியம் என்ன செய்து கொண்டிருந்தது என தேடுவது கடலில் கரைத்த பெருங்காயம் போன்ற ஒன்று. சரி, விடியல் வரும் என்று வீதிக்கு வீதி ஒலிபெருக்கியில் கோஷமிட்டு பாட்டுப் பாடி ஆட்சியை கைப்பற்றிய கட்சியின் செயல்பாடுகள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நுழைந்து டீ குடித்துவிட்டு போட்டோ ஷூட் செய்து நாலு பேருக்கு சாம்பார் சாதம் வழங்கிவிட்டு செல்வது மட்டுமே.
காந்திபுரம், லக்ஷ்மி மில், சிங்காநல்லூர், வடவள்ளி, டவுன் ஹால் உட்பட பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் அவினாசி மேம்பாலம் கீழ் உள்ள சாலையில் சென்ற ஒன்று கார் ஒன்றும் வெள்ளத்தில் சிக்கியது. மேலும் ரயில்நிலையம் அருகிலுள்ள மேம்பாலம் கீழ் உள்ள சாலையில் அரசு பேருந்து ஒன்றும் வெள்ளத்தில் சிக்கியது.
இதிலிருந்து தான் மாறுபட்டு நிற்கும் மக்கள் நீதி மய்யம். நமக்கு நாமே தீர்வு என்று முழங்கி வரும் நமது கட்சி கொள்கையின்படி தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள், அல்லல்படும் நம் மக்களின் துயர்துடைக்க நீங்கள் முடிந்தவரையில் நற்பணிகளைச் செய்திட வேண்டும் எனும் அறிவுரையின்படி, களத்தில் இறங்கிய கோவை மாவட்ட நிர்வாகிகள் உடன் இணைந்த மாவட்ட செயலாளர் பிரபு அவர்கள் தலைமையில் நேற்று பெய்த கனமழையில் கோவை தெற்கு தொகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழான சாலையில் வெள்ளத்தில் சூழப்பட்ட அப்பகுதியை நமது மய்யம் உறவுகள் முழு ஈடுபாட்டுடன் முன்பிருந்தபடியே சுத்தம் செய்து தந்தது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியாளர்களிடம் அதிகாரம் இருக்கலாம், அரசு இயந்திரங்கள் இருக்கலாம் அத்தனை இருந்தும் பேரிடர் காலங்களில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை உணர்ந்து அப்பேரிடரால் பாதிக்கப்படும் அவர்களின் வாழ்வாதாரங்களை சீர் செய்து தருவதே நல் அரசு செய்வதாகும், அப்படி செய்யத்தவறும் அரசும் அதன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் மெத்தனப்போக்கு கடைபிடித்தல் சரியான முறை அல்ல.
ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே, சீரமைப்போம் தமிழகத்தை !
கோவை முழுவதும் கனமழையால் தேங்கி நின்ற வெள்ளம் வடிந்து செல்ல இயலாத நிலையில், அங்கே இருந்த கடைகளுக்கு உள்ளே புகுந்தது வியாபாரம் செய்ய முடியாத நிலை ரங்கே கவுடர் வீதியில் ஏற்பட்டது. அந்த அடைப்பை தனி ஒரு ஆளாக நின்று செயல்பட்டு அப்பிரச்சினையை சீர் செய்த மக்கள் நீதி மய்ய நகர செயலாளர் தாஜுதீன் அவர்களின் செயல் பாராட்டத்தக்கது.