திருவண்ணாமலை டிசம்பர் 18, 2021

தடையில்லா குடிநீரை வழங்கும்பொருட்டு பொருத்தப்பட்ட கைப்பம்பில் குழாயடி தண்ணீரை தர மறுக்கும் திமுக பிரமுகர், இந்த மக்கள் விரோத போக்கு கொண்ட செயலை செய்தது செங்கம் அடுத்த ஆலப்புதூர் ஊராட்சி மன்றத் தலைவரான திருமதி செல்வி என்பவரின் கணவரும் திமுக பிரமுகருமான பாண்டியன் என்பவர் ஆவார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆலப்புதூர் ஊராட்சியில் உள்ள இந்திரா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் புதிதாக குடிநீர் எடுத்துக்கொள்ளும் கையடி பம்பு ஒன்றை அமைத்துத் தந்தது.

என்ன காரணம் ஏதும் சொல்லாமலே திடீரென தன்னுடன் அழைத்து வந்த தன் நண்பர் ஒருவருடன் திடீரென புதிதாக நிறுவப்பட்ட கைபம்பினை அதன் முக்கிய பாகங்களை கழட்டி கொண்டிருக்கவே அதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த குடிவாசிகள் அதிர்ச்சியடைந்து தங்களது செல்போன்கள் மூலம் காணொளியாக பதிவு செய்துகொண்டே என்ன காரணத்திற்காக இப்படி நீங்கள் பம்பினை கழற்றிக்கொண்டு இருக்கிறீர்கள் என கேட்க அதற்கு அவர் மிகவும் அலட்சிய தொணியில் பேசியபடியே இச்செயலை செய்தது அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது என தெரிவித்த ஊர்மக்கள் திட்ட வட்டாட்சி அலுவலரிடம் இதை புகாராக அளித்து அவர் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.