சுகாதரத்துறை செயலாளர் #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் அவர்களிடம் விளக்கம் கேட்கப் போவதாக ஊடகங்கள் நேற்று வேண்டுமென்றே ஒரு தவறான தகவலை பரப்பி, கட்சியின் மீதும் #நம்மவர் மீதும் அவதூறு பரப்பியுள்ளனர்.

#ராதாகிருஷ்ணன் அவர்கள் சொல்லாததை சொல்லியதாக சொல்லி வேண்டுமென்றே தவறான தகவலை திட்டமிட்டே பரப்பியுள்ளனர். யுடியுப் வலைதளங்களிலும் இந்த தவறான தகவலின் அடிப்படையில் வன்மம் கொண்டு #கமல்ஹாசன் அவர்கள் மீது சேற்றை வாரி வீசியுள்ளனர். இன்று மன்னிப்பு கேட்பார்களா? தகவல் சரியானது தானா என கொஞ்சம் கூட சரிபார்க்காமல் கேள்விகள் கேட்பது முறையா?

#கொரோனா முதல் அலை வந்தபோது. தனது வீட்டை மருத்துவபயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளச் சொன்னவர்.தொடர்ந்து விழிப்புணர்வு அவ்வப்போது ஏற்படுத்திவருகிறார். அப்படிப்பட்டவர் தவறு செய்வாரா? @vikatan இம்பெர்பக்ட்ஷோ முதற் கொண்டு தவறான தகவலை பரப்பிய அனைத்து ஊடகங்களும் மன்னிப்பு கேட்பார்களா?

தலைப்பை மற்றும் பாராமல் முழுவதும் படியுங்கள்