சென்னை ஆகஸ்ட் 22, 2022

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதிகள் இல்லையடி பாப்பா எனும் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடலைக் கற்பிக்கும் ஓர் ஆசிரியரே சாதி வெறி கொண்டு பேசுவது கடும் அதிர்ச்சியை தருகிறது.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றும் தமிழ் பேராசிரியர் ஒருவர் தன்னிடம் பயிலும் மாணவர் ஒருவரிடம் அவரது சாதியை வைத்துப் பேசி பிரிவினையை உண்டாகும்படி சர்ச்சைப் பேச்சினை பேசியிருப்பது அவரது சாதி வெறியை அப்பட்டமாக காண்பித்து இருக்கிறது மேலும் அவருடைய பேச்சில் தீண்டாமை எனும் கொடிய விஷத்தினை கக்கியிருக்கிறார் என்றும் தெரியவருகிறது. இதனை அறிந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்வது மட்டுமில்லாமல் சாதியை முன்னிறுத்தி கண்டபடி பேசிய அந்தப் பேராரிசியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் அறிக்கை :

“குறிப்பிட்ட சமூக மாணவர்கள் என்றாலே பிரச்சினைதான். உன் முகத்தைப் பார்த்தாலே நீ எந்த சாதி என்று தெரிகிறது” என மாணவரிடம் விஷத்தைக் கக்கியிருக்கிறார் சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியை ஒருவர். இது தொடர்பான ஆடியோ வெளியாகி, அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், “அந்தக் குறிப்பிட்ட சாதி பசங்களால்தான் நமக்குப் பிரச்சனை, நீ எந்த கம்யூனிட்டி?” என்றும் அவர் கேட்டிருக்கிறார். தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய பேராசிரியர்களே, அந்த கொடுங்குற்றத்தைப் புரிவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.

இளம் தலைமுறையை நல்ல முறையில் வழிநடத்த வேண்டிய கல்வி நிறுவனங்களில் சாதி புரையோடிப் போயிருக்கிறது. சாதியை முன்னிறுத்தி, மாணவர்களை இழிவுபடுத்திப் பேசியது உண்மையெனில், சம்பந்தப்பட்டவரை தண்டிக்க வேண்டும்.

இனியும் இதுபோல நிகழாத வகையில், கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். – மக்கள் நீதி மய்யம்

https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/sc-students-are-the-problem-your-face-shows-which-caste-you-are-pachaiappan-college-professor-is-caste-fanatic–rguu44

https://tamil.news18.com/news/chennai/tamil-nadu-pachaiyappa-college-tamil-hod-anuradha-caste-slur-audio-speech-leaks-create-controversy-789265.html

https://www.thenewsminute.com/article/chennai-s-pachaiyappa-college-probe-hods-casteist-remarks-against-dalit-students-167104

சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியை மீதான சாதிவெறியை தூண்டிய உரையாடலுக்காக தமிழக அரசின் உயர்கல்வித்துறை தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இருந்தாலும் இது போன்று சாதி வேற்றுமை & தீண்டாமை கடைபிடிப்பது எவராக இருந்தாலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.