இன்று 17-Dec-2021 திருநெல்வேலி தனியார் பள்ளி கட்டிட விபத்தில் மூன்று மாணவர்கள் பலியானார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யம் கோவை மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்கள் கண்டனம் தெரிவித்து அரசின் செயலையும் கண்டித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது

நான் லயன்ஸ் ஆளுநராக இருந்த போது, 10 அரசு பள்ளிகளிலே மாணவிகள் பயன்படுத்த கழிவறைகள் அரிமா நண்பர்களுடன் இணைந்து கட்டிக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்த அனுபவத்தை வைத்து எனது பார்வை

3 மாணவர்களுக்கு தலா 10 லட்சம் வீதம் 30 லட்சம் கொடுத்தாலும், போன உயிர் திரும்பி வருமா !?இதே பணத்தில் 5ல் இருந்து 10 பள்ளிகளுக்கு (மாணவர்கள் எண்ணிக்கை பொறுத்து) சுகாதாரமான கழிப்பறைகள் முன்பே கட்டியிருக்கலாம்.நான் பார்த்த வரையில், நிறைய பள்ளிகளில் கழிப்பறைகளின் நிலை…

1. கழிவறைகளே இல்லை.2. உபயோகிக்கும் நிலையில் இல்லை.3. அசுத்தமாக உள்ளது.4. மாணவ, மாணவியர், ஆசிரியர் எண்ணிக்கைக்கு தகுந்தாற் போல இல்லை.5. மாணவிகளுக்கு இருக்கிறது, மாணவர்களுக்கு மட்டும் இல்லை.6. தண்ணீர் வசதி – இல்லை/சரியான அளவு இல்லை.இவைகள் ஏன் என்று யோசித்தால்

1. மக்கள் நலனை விட சுயநலனை சிந்திக்கும் அரசாங்கம் / பணியாளர்கள்.2. கட்டப்படும் கட்டிடங்களின் தரம், லஞ்சத்தின் அளவைப் பொறுத்து மாறுபடும்.3. ஆசிரியர்கள் / பணியாளர்கள் சம்பள உயர்வுக்கு போராடித் தான் பார்த்திருக்கிறோம். பள்ளி கட்டமைப்பின் தரம் உயர போராடி பார்த்திருக்கிறோமா?

கழிப்பறை என்பது ஒரு அவசியமான, அத்தியாவசியமான தேவை என்பதை அரசு / மக்கள் எப்போது உணர்வார்கள் !!??லஞ்சம், ஓட்டு அரசியலில் மனிதம் மிதிபட்டு போகிறது. மனித உயிர்கள் பணத்தால் விலை பேசப்படுகிறது.என்று தணியும் இந்த லஞ்சத்தின் தாகம்?