அது என்ன நிதியியம் ?

பார்ப்பான் சொன்ன சாஸ்திர கட்டுக்கதைகளுக்குள் கட்டுப்பட்டு அடிமையாய் வாழ்வதை பார்ப்பனீயம் என்று சொல்லும்போது, திமுக உருவாக்கும் இந்த புதிய ஜாதி முறையில் அடங்கி இருப்பதையும் “நிதி” ஜாதியினர் மற்றவர்களை அடிமையாய் பாவிப்பதை நிதியியம் என்று சொல்லலாமே!

அது ஒரு கட்சியின் விவகாரம் என்று விலகி செல்வது அறிவுடைமை ஆகாது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம் என்ற நிலை இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஒரு சில குடும்பங்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்திலும், ஒரு சில குடும்பங்கள் ஆட்சி செய்யும் குடும்பத்திற்கு சாமரம் வீச வேண்டும் என்றும், ஒரு சில குடும்பங்கள் போஸ்டர் மட்டுமே ஒட்ட வேண்டும் என்றும் பிரிப்பதும் புது வகை ஜாதி தானே !

சற்று 2000 ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தால் சாஸ்திரத்தின் பெயரால் மதத்தின் பெயரால், பிறப்பை அடிப்படையாக வைத்தே இந்த ஜாதி சமூகம் உருவாக்கப்பட்டுள்ளது. சத்திரியன் மட்டுமே அரசாள முடியும், பிராமணன் மட்டுமே கோவிலின் கருவறைக்குள் செல்ல முடியும் வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய முடியும் சூத்திரன் மற்றவர்களுக்கு சேவை செய்ய மட்டுமே முடியும்.

பெண்கள் ஆண்களுக்கு சேவை செய்யத்தான் என்பதற்கும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வாரிசுகள் மட்டுமே முதலமைச்சர் வேட்பாளராக முடியும், அடுத்த வாரிசே துனை முதலமைச்சர் ஆக முடியும், அமைச்சர்களின் வாரிசுகளே எம்பிக்கள்/அடுத்த அமைச்சர் ஆக முடியும் என்பதும் ஒன்றுதானே.

DMK Family Tree

மாற்றுக்கட்சியில் இருந்து வராமல் திமுகவிலேயே இருந்து யாருடைய மகனாகவோ சொந்தமாகவோ இல்லாத ஒருவர்கூட திமுகவில் அமைச்சராகவோ மக்கள் பிரதிநிதியாகவோ ஆகவில்லை. தலைவராக ஒரு ஜாதி “நிதி” என்னும் ஜாதியா? சாமரம் வீசும் அமைச்சர்களாக “அன்பில்” “டிஆர்பி”, “பிடிஆர்” “துரைமுருகன்” என்னும் ஜாதிகள், முட்டுக் கொடுக்க கொத்தடிமை, கூட்டணி கட்சிகள் ஒரு ஜாதி, திமுக தவறை சுட்டி காட்டுபவர்கள் அனைவரும் “சங்கி” எனும் ஜாதி. திமுகவை எதிர்க்கும் அனைவருமே முட்டாள்களாக நினைப்பது எவ்வளவு ஆணவமான எண்ணம்.

மதத்தால் மக்களை பிரித்தது பழைய ஜாதி சமூகம் என்றால் கட்சியால் மக்களை பிரிப்பது புதிய ஜாதி சமூகம். பெண்களுக்கு திமுக கொடுக்கும் இடமும் பார்ப்பனீயத்தை போலவே உள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி கனிமொழி, திருமதி தமிழச்சி தங்கப்பாண்டியன், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கீதா ஜீவன்,  மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி. என்.கயல்விழி செல்வராஜ் போன்று விரல் விட்டு எண்ணக் கூடிய பெண்களே உள்ளனர்.

இவர்களை தவிர வேறு எந்த பெண்ணும் திமுகவில் வெற்றி பெற்றதாக தெரியவில்லை. ஏன் திருமதி கனிமொழிக்கு கூட தலைவர் பதவி மறுக்கப்படும்.  மாண்புமிகு அமைச்சர் திருமதி கீதா ஜீவனுக்கு மகளிர்  உரிமை துறையும் மாண்புமிகு அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையே வழங்கப்பட்டுள்ளது.  

ஏன் மாண்புமிகு அமைச்சர் திருமதி கீதா ஜீவன் பெண் என்பதாலேயே அவருக்கு மகளிர் சார்ந்த துறையும் மாண்புமிகு அமைச்சர் திருமதி என்.கயல்விழி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளதா?  ஏன் அவர்களுக்கு மற்ற துறைகளை ஆளும் திறன் இல்லையா?  அல்லது மற்ற துறைகளையும் ஆளும் திறன் கொண்ட பெண்கள் திமுகவில் இல்லையா ?

பெண்கள் சமையலறையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறதா திமுக?  இந்த நான்கு பெண்மணிகளிலும் மூவர் திமுகவின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்களே.  நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மகளும் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலினின் சகோதரியும் ஆவார்  என்பது அனைவரும் அறிந்ததே.  

நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியனின் மகளும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசுவின் சகோதரியும் ஆவார். மாண்புமிகு அமைச்சர் திருமதி கீதா ஜீவன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு என்.பெரியசாமியின் மகள் ஆவார்.  

பெண்களுக்கு இடம் இல்லை என்றாலும் பேரன்களுக்கு திமுகவில் இடம் உண்டு. நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறனுக்கு மட்டுமே மத்திய சென்னை  தொகுதியில்  போட்டியிட தொடர்ந்து  வாய்ப்பளிக்கப்படுகிறது.  ஏன் மத்திய சென்னை  தொகுதியை  திரு.தயாநிதி மாறனுக்கு இட ஒதுக்கீடு செய்துவிட்டதா திமுக?

சிறுவனாக இருந்தாலும் திமுக வாரிசு என்ற தகுதி போதும், பதவியும் கர்வமும் தேடி வரும். அண்மையில் மாண்புமிகு அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் பேரனின் ஒரு காணொளியை பார்த்தேன்.

15 வயது சிறுவனிடம் எவ்வளவு கர்வம்? எவ்வளவு திமிரான தோரணை. அந்த சிறுவன் பேசியதை விட பேச்சின் இறுதியில் ஒரு நபர் அவனிடம் ஏதோ கேட்க, அந்த சிறுவன் அவர் அவனின் அடிமையைப்போல உத்தரவிடுவதும் என் கண்ணுக்கு உறுத்தியது.

ஆயிரம் குற்றம் குறை இருந்தாலும் அதிமுக-வில் யாரென்றே தெரியாத மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்தாவது முதலமைச்சராக முடிந்ததே. ஆனால் அப்படிப்பட்ட அதிமுகவிலும் இந்த குடும்ப அரசியல் ஆரம்பித்து விட்டது.  முன்னாள் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் திரு. ஓ.பி.ரவீந்திரநாத்,  முன்னாள் அமைச்சர் திரு.ஜெயக்குமாரின் மகன் திரு.ஜெயவர்தன், முன்னாள் மேயர் திரு.ராஜன் செல்லப்பாவின் மகன் திரு.ராஜசத்தியன் மற்றும் முன்னாள் சபாநாயகர் திரு.பி.எச்.பாண்டியனின் மகன் திரு.மனோஜ் பாண்டியனுக்கே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.  இதில் ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியும் பெற்றார்.

AIADMK

மக்கள் நீதி மய்யத்தில் திறமையின் அடிப்படையில் பதவிகள் வழஙகப்படுகிறதே. இது திரு கமல்ஹாசன் துவங்கிய கட்சி என்பதால் அவர் தான் தலைவராக இருக்க முடியும். அவர் கொள்கை பிடித்து கட்சியில் இணைவதே அவர் தலைமையை அங்கீகரிப்பதாகும்.

திமுகவில் காலை நக்கினாலும் எத்தனையோ அடிமட்ட தொண்டர்களுக்கு பதவி கிடைக்காது. அதை சொல்ல உனக்கு உரிமை இல்லை என்று என்னை சொல்ல முடியாது. ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுவதை எதிர்ப்பதே ஒரு நல்ல குடிமகனின் கடமை. இல்லை, இதே போக்குடன் இன்னும் 500 ஆண்டுகள் கழித்து எப்படி இருக்கும் என்று சிந்தித்தால் நான் சொல்வது புரியும். இப்போது இருக்கும் ஜாதிகள் அழிந்திருக்கும் ஆனால், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் கட்டமைக்கப்பட்ட புதிய ஜாதி சாக்கடை வீதிகளில் எங்கெங்கும் விஷ நதியாய் ஓடும்.

எண்ணமும், எழுத்தும் : மணிகண்டன் ராஜன்

https://twitter.com/ManigandanRaaja?s=20