சென்னை : பிப்ரவரி 21, 2024

சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் நாற்பது சதவிகித மக்கள் வாக்களிக்க முன்வருவதில்லை, அந்த நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதும் ஜனநாயக கடமையை நிறைவேற்றாமல் இருப்பதும் குற்றமில்லையா என கேள்வி எழுப்பினார்.

ஒவ்வொரு தேர்தலும் அது பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் எதுவாக இருந்தாலும் தேர்தல் நாளன்று ஏறத்தாழ நாற்பது சதவிகிதம் வாக்காளர்கள் ஜனநாயக கடமையான வாக்களிப்பதை தவிர்ப்பது என்பது மனசாட்சிக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது ஆகும். தார்மீக மற்றும் அடிப்படை உரிமையும் ஆகும். அப்படி வாக்களிக்க வராமல் இருக்கும் அவர்கள் “நம்மவரை பார்த்து நீ நடிகன் தானே எதற்காக நாடாள ஆசைப்படுகிறாய்” என கேட்பதற்கு தகுதி அற்றவர்கள் என கொள்வதை தவிர வேறு வழியில்லை.

ஒரு நடிகன் எப்படி அரசியலில் ஈடுபடலாம் என்று கேட்பதும் அவருக்கு நாட்டை ஆளவேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் எதற்காக வர வேண்டும் என்கிற கேள்வியை தலைவரை ஒப்புக்கொள்ளாத யாரோ ஒரு சிலரும் எழுப்பி வருகிறார்கள். அவர்களுக்கான எங்கள் பதில்.

“நான் என்றைக்கும் பெரிய நடிகன் என்று கர்வப்பட்டு, அதனால் என்னை பின்தொடர வேண்டும் என்றோ எனது பேச்சுக்களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ நான் என்றைக்கும் சொன்னதில்லை இனியும் சொல்லப்போவதுமில்லை, யார் என்ன சொன்னாலும் எவர் என்ன சொன்னாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம். சொன்னவை என்ன ஏதென்று ஆராய்ந்து பின்னரே ஒப்புக் கொள்வதும் மறுப்பதும் உங்கள் உரிமை என நான் என்றுமே நம்புபவன். என்னை என் பொது வாழ்க்கையை தேடித் பிடித்து அறிந்து கொள்ளுங்கள், மக்களுக்காக நான் என்னவெல்லாம் செய்தேன் என்றும் எனக்கு மிகவும் உறுதுணையாக எனது ரசிகர்கள் இருந்தார்கள் என்பதும் கண்டு கேட்டு உணர்ந்து கொள்ளுங்கள் பின்னர் என் மீது பற்று கொண்டு எனது தலைமையில் செயல்படும் கட்சியில் உங்களை இணைத்துக் கொண்டு என்னுடன் கரம் கோர்த்து வாருங்கள் நம் தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக ஆக்கிடுவோம்” என்பதாக பல இடங்களில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்.