சென்னை ஜனவரி 10, 2022

பெண்கள் எப்போதும் பலகீனமானவர்கள் என்ற வெற்றுக் கூச்சல்கள் கரைந்து காணாமல் போய் பல மாமாங்கம் ஆயிற்று. நெடிதுயர்ந்து நிற்கும் இமையம் போல் மாதர்குலம் சாதனைகளை செய்துவருவது சிறப்பு.

பெண்கள் என்றும் தம் கல்வியறிவில், தொழில்துறையில் மேலும் இன்னபிற துறைகளில் கோலோச்ச வேண்டும் என்று கனவு கண்ட நம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கனவுகள் நினைவாகிடும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. முன்பெல்லாம், பெண்களுக்கு ஒன்றும் தெரியாது என்று ஒதுக்கி வைத்து புறக்கணிகப்பட்ட செயல்கள் தகர்த்து எறிந்துவிட்டு முன்னேறி வருகின்றனர் மகளிர்.

அப்படி ஓர் உன்னத பெண்மணியாய் உளவுத்துறையின் ஐ.ஜி யாக பதவியேற்கும் மதிர்ப்பிற்குரிய ஆசியம்மாளுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்துக்களை பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டது.