நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 4-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்கள் நீதி மையத்தின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் சென்னை, கோவை, திண்டுக்கல், சேலம், கரூர் மாநகராட்சி வேட்பாளர்கள் உடுமலைப்பேட்டை, கொடைக்கானல், தேனி அல்லிநகரம், பெரியகுளம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், பள்ளபட்டி, சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய நகராட்சிகள் மற்றும் மடத்துக்குளம், வடுகபட்டி, ஆண்டிப்பட்டி, வத்தலகுண்டு, நிலக்கோட்டை, ஆலம்பாளையம், அரவக்குறிச்சி ஆகிய பேரூராட்சிகளுக்கான 150 வேட்பாளர்களின் 4-ஆவது பட்டியலை வெளியிட்டார் தலைவர் கமல்ஹாசன். மேலும் அவர் வேட்பாளர்களுக்கு தனது வாழ்த்துக்களையும், மக்களை மாற்றத்திற்காக வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.