மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன். சென்னை, தாம்பரம், மதுரை, மாநகராட்சி களுக்கான வேட்பாளர்களும் ஓசூர், மயிலாடுதுறை, பொள்ளாச்சி, பரமக்குடி, நாகை நகராட்சிக்கான வேட்பாளர்களும் என மொத்தம் 154 பேர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும் அவர் நேர்மையும், திறமையும், தூய்மையும் கொண்ட இவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.