கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதை தடை – தலைவர் கமல்ஹாசன் கருத்து

கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதை தடை செய்யும் அரசாணைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றது.இதற்க்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.” என கருத்து தெரிவித்துள்ளார்.