திருப்பூர், காரணம்பேட்டை பிப்ரவரி 25, 2022

கோவிட் பெருந்தொற்று, இயற்கைச்சூழல் என தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து வந்த விசைத்தறியாளர்கள் கிடைக்கும் வருவாயில் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்திட பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். இதனை அரசும் சம்பந்தப்பட்டவர்களுக்கு (விசைத்தறியாளர்கள்) கூலி உயர்வினை அளிக்குமாறு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தியது. ஆயினும் அதனை வெறும் அறிவிப்புடன் மட்டுமே வைத்து விட்டனர் ஜவுளி உற்பத்தியாளர்கள்.

தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டும் அதற்கான எந்த முன்னெடுப்பையும் அவர்கள் மேற்கொள்ளாத சூழலில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெய்தல் பணி செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக அரசு அறிவித்த கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும் கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் அமல்படுத்த மாவட்ட நிர்வாகங்களை வலியுறுத்தியும் நடைபெறும் விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் போராடும் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கலந்துகொண்டு போராட்டக் குழுவினருக்கு தங்கள் ஆதரவை அளித்தது.

இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்று வருகையில் மக்கள் நீதி மய்யம் திருப்பூர் வடமேற்கு மாவட்ட செயலாளர் திரு எஸ் கோபாலக்ருஷ்ணன் தலைமையில் துணை மாவட்ட செயலாளர்கள் திரு சுப்பிரமணியம், திரு செல்வராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் திரு செந்தில்குமார் அவர்கள் மற்றும் மய்யம் நிர்வாகிகள் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

சிக்கல் நீக்கப்பட்டு நூற்ற நூல் நெய்யப்பட்டு ஆடையாக உருப்பெருகிறது, அவற்றை நெசவிடும் விசைத்தறிகளின் ஓசைகள் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் அதனை கொண்டு பிழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் சிக்கலில்லாமல் சிரமமில்லாமல் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து வாழ இயலும்.

உடலை மறைக்க ஆடைகள் உண்டு ; ஆனால் பசியை மறைக்க எதுவும் இல்லை.

https://www.facebook.com/100001810263237/posts/7115045428565729/?d=n