ஜனவரி 25, 2022
மொழிப்போர் தியாகிகள் தினம்
மொழிப் போர் தியாகிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி அன்று நினைவு கூறப்படும். சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்களது உயிரை நீத்துள்ளனர்.
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் 1960-களில்தான் உச்சத்தை எட்டினாலும், 1930-களிலேயே தொடங்கிவிட்டது. அனைத்து பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 1938-ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார் உள்ளிட்டோர் வழிகாட்டுதலில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற நடராசன், உடல்குன்றி சென்னை சிறையில் உயிரிழந்தார். மொழிப் போராட்டத்தின் முதல் களப் பலி அவர்தான். அதைத் தொடர்ந்து கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்துவும் சென்னை சிறையில் உயிர் நீத்தார்.
மொழிப்போரில் உயிரை இழந்த தியாகிகளின் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. அவர்களின் வாரிசுகள் எந்த வகையான சுக போகங்ளையும் அனுபவிக்க முடியாது நின்றார்கள் என்பதே நிதர்சனம்.
இவ்விரு மொழிப்போர் தியாகிகள் நினைவாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு அலுவலகம் கட்டிடம் தாளமுத்து – நடராசன் எனும் பெயரில் இயங்கி வருகிறது.
இவையெல்லாம் (பலருக்கு) உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் ஆயினும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
அதே பழம்பெரும் மிகச் சிறப்பு வாய்ந்த உலகின் தொன்மையான மொழியான தமிழை வைத்து ஒரு குடும்பம் பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருக்கிறது அவர்களது ஏட்டில் வெறும் வாய் வார்த்தை அரசியலை கொண்டு. அவர்கள் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களின் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருந்தாலும் இந்தி கட்டாயமாக கற்பிக்கப்படுகிறது.
இதற்கு மேலும் வேறு என்ன வேண்டும் ?