குளித்தலை பிப்ரவரி 27, 2022

கடந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் குளித்தலை தொகுதியில் திமுக பிரமுகர் மாணிக்கம் போட்டியிட்டு வென்றார்.

கரூரச் சேர்ந்த பெண்மணி ராஜம்மாள் என்பவரிடம் 9 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பணத்தை திரும்பச் செலுத்தும் வகையில் வங்கிக் காசோலையாக அளித்தார். அந்த காசோலை வங்கிக்கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால் வங்கியின் மூலமாக திருப்பி அனுப்பபட்டுவிட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜம்மாள் கரூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் நேரில் ஆஜராக கடந்த அக்டோபர் 18, டிசம்பர் 2 மற்றும் ஜனவரி 24 என மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டது.

மூன்று முறையும் ஆஜர் ஆகாததால் நீதிபதி எம் எல் ஏ மாணிக்கத்திற்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

“எனது ஆட்சியில் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்தார்கள் என தெரியவந்தால் அவர்கள் மீது நான் எடுக்கும் நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும்” – முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள்.

என்ன செய்யப் போகிறார் முதல்வர். பிடி வாரண்ட் பிறப்பித்து, பிப்ரவரி 23 முதல் 27 இதுவரை 4 விடியல்கள் விடிந்து விட்டது.

https://tamil.samayam.com/latest-news/karur/karur-court-has-issued-arrest-warrant-to-kulithalai-dmk-mla-manickam-in-a-cheque-fraud-case/articleshow/89787557.cms