கும்பகோணம் பிப்ரவரி 11, 2022

வருகிற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக இளைஞரணி செயலாளரும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆன உதயநிதி ஸ்டாலின் தனது கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து வாக்கு சேகரிக்கும் பொருட்டு தஞ்சாவூர் பகுதிகளில் அப்பணிகளை முடித்துவிட்டு கும்பகோணம் மாவட்டத்தில் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக சென்றபோது பள்ளிய அக்ரஹாரம் பகுதியில் கரந்தை தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுமார் 20 பேர்களுக்கு மேல் திமுக கொடிகளை ஏந்தி நின்று அவரை வரவேற்றது மக்களிடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் ராமநாதன் திமுக நிர்வாகி இவரது பேரன் செந்தமிழ்செல்வன் தற்போது மாநகராட்சி தேர்தலில் 1 ஆவது வார்டில் போட்டியிடுகிறார் அவருக்கு ஆதரவாக பள்ளி மாணவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது.

கொடிகள் பிடித்து கோஷங்கள் போடுவது என ஈடுபடும் மாணவர்கள் அதற்கான நிர்ணயம் செய்யப்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும் என்பது நியதி.

அது சரி நீதி நியாயம் என்பதைப்பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்படுபவர்களா என்ன ?

https://tamil.news18.com/news/tamil-nadu/school-students-involved-in-udayanithi-stalins-campaign-with-school-uniforms-gur-ekr-689481.html?utm_source=izooto&utm_medium=push_notification&utm_campaign=promotion