நாடு முழுதும் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாநிலம் தோறும் நடக்கும் சட்டமன்ற தேர்தல் ஆகட்டும் அவைகளுக்கு இந்த கட்சிகள் போட்டி போட்டுகொண்டு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நூற்றுக்கணக்கில் கொடுத்துச் செல்வார்கள், வோட்டுக்கள் அறுவடை செய்து விட்டு பின்னர் அதை பற்றி எஎங்கும் எப்போதும் பேசமாட்டார்கள் எதுவரை என்றால் அடுத்த தேர்தல் வரும்வரை அல்லது இது போன்ற உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்கும்போது மீண்டும் தூசி தட்டி வாக்குறுதிகளை தட்டில் வைத்து வோட்டளிக்கும் பொதுஜனங்களை ராஜ மரியாதையுடன் அணுகுவார்கள்.

நம் மக்களின் எண்ணம் இப்படியாக இருக்கும் சரி போனால் போகட்டும் இனி வரும் காலங்களில் சொல்வதை செய்து தருவார்கள் என ஓட்டுப் போட்டுவிட்டு இலவு காத்த கிளிகளாக மோட்டுவளையை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தான்.

தனது தலைமையில் 2018 இல் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கிய தலைவர் திரு கமல்ஹாசன் எந்த கூட்டணி இல்லாமல் 2019 இல் நடந்த நாடாளுமன்ற மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2021 இல் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி கிடைக்காமல் போனாலும் இந்த மண் பயனுற வேண்டும் மண்ணின் மக்கள் பயனுற வேண்டும் எனும் வழக்கிற்கு ஏற்ப இம்முறை வேறு எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் களம் காண்கிறார்.

ஓட்டுக்கு பணமும் கொடுக்க மாட்டோம் வெற்றி பெற்று நின்றால் இலஞ்சமாக எவ்வித பணமும் நேரிடையாக அல்லது மறைமுகமாக எவரிடம் பெறமாட்டோம் என்று எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளுடன் தங்கள் வார்டுகளில் இன்னமும் நிறைவேற்றப்படாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருக்கும் பணிகளை விரைவில் தங்கு தடையின்றி செய்து முடிப்போம் என்று சூளுரை செய்து களம் காண்கிறார்கள் மய்யத்து வெற்றி வேட்பாளர்கள்.

பழுத்து பழம் பெரும் கட்சிகள் ஆன திமுக மற்றும் அதிமுக என ஒன்று கூட சொல்லத் தயங்கும் அல்லது பேசத் தயங்கும் பேசாப்பொருளை பேசித் துணிவது நமது மய்யத்து தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே, மக்களுக்கான நேர்மையான அரசியலை முன்னெடுத்து வரும் அவர் உள்ளாட்சிப் பணிகள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.

உள்ளாட்சி அமைப்புகள் பற்றி தொடர்ந்து பேசிவரும் மய்யம் தலைவர், கிராம சபை, நகர சபை, வார்டு சபை பற்றி பேசுகிறார் அதனைப்பற்றி தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது தூய குடிநீர், குப்பைகள் அகற்றுதல் அதை மறுசுழற்சி செய்தல், கழிவுநீர் அகற்றுதல், மழைநீர் வடிகால் அமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல், கண்காணிப்பு காமெராக்கள் அமைத்தல், அவசர சிகிச்சைக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவைகள் என வெகு முக்கியமான தவிர்க்கவே முடியாத செயல்களை பட்டியல் இட்டு தேர்தல் வாக்குறுதியான உள்ளாட்சித் தேர்தல் அறிக்கையாக மக்களுக்கு சமர்ப்பித்திருக்கும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் மட்டுமே என்று முன்மொழியும் ஓர் அரசியல் விமர்சகர் பார்வையில் காணொளி உங்களின் பார்வைக்கு.

சாத்தியம் என்பது சொல் அல்ல ; செயல் – திரு கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்.