தூத்துக்குடி பிப்ரவரி 11, 2022

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அப்பகுதி திமுக வின் ஆலோசனைக் கூட்டம் நடந்த போது கட்சி நிர்வாகி ஒருவர் தனது சக கட்சிக்காரர்களுக்கு நம்பிக்கை ?!?! தரும் பேச்சு ஒன்றை கீழே தருகிறோம்.

ஒன்று வைத்தால் இரண்டு நான்கு வைத்தால் எட்டு என்பன போன்ற சூதாட்டம் (சூதாடுவது சட்டப்படி குற்றம்) தொனியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பேசுகிறார்.

அவன் 500 கொடுத்தால் நாம 1000 கொடுக்கலாம், இல்லன்னா 1000 கொடுத்தால் நாம் 2000 கொடுக்கலாம் அதைப்பற்றி நம்ம ஆட்கள் யாரும் கவலைப் பட வேண்டாம் என்று பேசும் இவரைப் போன்றோர் இவர் சார்ந்திருக்கும் கட்சி பெரும் வெற்றி எதற்கு ஈடாகும் இது எவ்வளவு கேவலமான செயல் அல்லவா ?

ஊழல் களையப்பட வேண்டும் எனில் மக்கள் நீதி மய்யம் மட்டுமே தீர்வு.

ஓட்டுக்கு பணம் கொடுப்பது – பணம் வாங்குவது இரண்டும் சட்டப்படி தண்டனைக்குரிய பெருங்குற்றமாகும்.