தாம்பரம். பிப்ரவரி 26, 2022
தாம்பரம் நகராட்சி (சென்ற 2021 ஆம் ஆண்டில் தான் மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது) வார்டு எண் 5 இல் அப்போதைய அதிமுக ஆட்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் ஆக இருந்த TKM சின்னையா மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் இருந்து நிதியும் கொண்டு கட்டப்பட்டது சமுதாய கழிப்பிடம், பம்மல் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் வரும் பகுதி ஃபாத்திமா நகர்.
சுமார் பத்து லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சமுதாய கழிப்பிடம். கட்டி முடிக்கப்பட்ட வருடம் 2015-16 என குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வின் S.R ராஜா வெற்றி பெற்றார்.
ஆயினும் முன்னவர் (TKM சின்னையா) காலத்தில் முடித்த பணியை பின்னவர் வந்தும் திறந்து வைக்கவில்லை 5 வருடங்களாக திறக்கப்படாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது மேலும் அக்கழிவறைக்கு செல்லும் பாதை சாக்கடைகள் மற்றும் தேங்கி நிற்கும் நீர்நிலை என அங்கே செல்ல முடியாத நிலையில் உள்ளது. தற்போது அவரே (S.R. ராஜா) மீண்டும் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துள்ளார்.
இம்முறை விடியல் வருமா அல்லது கட்டப்பட்ட கழிவறை கட்டிடம் மேலும் சிதிலம் அடையுமா ?
“மக்களுக்கான கடமையையும் மக்களுக்கான தேவையையும் அறியாத மாந்தர் மகுடம் சூடினால் இதுபோன்ற கஜானா விரையமாவதுதான் மிஞ்சும்.”. – தினேஷ் பாஸ்கர் (உள்ளாட்சி தேர்தல் 2022 இல் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட துடிப்பு மிக்க இளைஞர்)