சென்னை மார்ச் 01, 2022
நடைபாதைகளை அடைத்து தங்கள் விசுவாசத்தை காண்பிக்கும் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.
பரபரப்பான சாலைகளில் விரைந்து செல்லும் வாகனங்கள், சாலையின் இருபுறங்களிலும் நடைபாதைகள் பாதசாரிகள் பயன்பாட்டுக்கு என இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பெரும்பாலும் நெரிசல் மிகுந்த பொதுமக்கள் புழக்கம் அதிகம் இருக்கும் சாலைகள் ஓரம் நீளும் நடைபாதைகளில் குழி பறித்து அதில் கட்சிக் கொடிகளை நட்டு வைத்திருக்கும் ஆளுங்கட்சியின் பிரதிநிதிகள் அவ்வழியே வந்து செல்லும் தங்கள் தலைவர்கள் பார்த்து புளங்காகிதம் அடைய வேண்டி நடைபாதைகளில் நீதிமன்றங்களின் தடை உத்தரவையும் மீறி இச்செயலை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். அது ஆளும் திமுக, இதற்கு முன் ஆண்டுச் சென்ற அதிமுக என கட்சிப்பாகுபாடு இல்லாமல் பொதுமக்களின் நலனை கொஞ்சமும் அக்கறை கொள்ளாமல், ஒருவேளை அந்தக் கொடிக்கம்பங்கள் சரிந்தால் அதனால் உண்டாகும் விபரீதங்களை உணர்ந்தும் தொடர்ந்து இத்தைகைய செயல்களை செய்துகொண்டே இருப்பது கண்டனத்துக்குரியது. இதனால் உண்டாகும் சேதங்கள் யார் பொறுப்பு ? மேலும் இதனை தொடர்ந்து எதிர்த்து வருவது அறப்போர் இயக்கம்.