கோடிகளை கொட்டிக் குவித்து வாங்கப்பட்ட ஓட்டுக்களினால் தலைவர்களாக நான் நீ என போட்டி மனப்பான்மையில் துவங்கிய உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் தேர்வு கலவரம் மற்றும் அடிதடி கைகலப்பு என விபரீதங்களில் நடந்து முடிந்திருக்கிறது.

சென்ற பிப்ரவரி மாதத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி என ஒரே கட்டமாக நடந்தது பின்னர் 22 ஆம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு பெரும்பாலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரே வென்றார்கள். மாற்றுக் கட்சிகள் மற்றும் சுயேச்சையாக களமிறங்கிய பலரும் வென்று கவுன்சிலர்களாக பதவி ஏற்றனர்.

அதன் தொடர்ச்சியாக ஊராட்சி மன்றத்தில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு கவுன்சிலர்கள் தங்களில் இருந்து முறையே இருவரை தேர்வு செய்வார்கள். முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் கூட்டணிக் கட்சிகளுக்கும் தலைமைப் பொறுப்பை பகிர்ந்து அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

ஆயினும் சொன்னதை மதிக்காமல் ஆங்காங்கே திமுகவினர் சர்ச்சைகளை உண்டாக்கி அமைதியை சீர்குலைத்தனர் என்றால் மிகையாகாது.

பதவியை ராஜினாமா செய்ய முடியாது – முதல்வருக்கு நோ சொன்ன திமுக சேர்மனின் கணவர் பதில்.

50 லட்சம் தரேன் …! இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது …! அதிமுக கவுன்சிலரை விலை பேசும் திமுக ஒன்றிய செயலாளரின் ஆடியோ பேச்சு (கீழே)

தர்மபுரியிலும் கூட்டணி தர்மத்தை மீறிய திமுக-வினர்

ஆடு பகை குட்டி உறவு – எனும் கதையாக குமரியில் தலைமை அறிவித்த வேட்பாளர்களை தோற்கடித்து விட்டு பா ஜ க ஆதரவுடன் வெற்றி பெற்ற திமுக.

குழித்துறை நகராட்சியை பா ஜ க கவுன்சிலர்கள் ஆதரவுடன் கைப்பற்றிய திமுக, கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில் திமுகவினர் கூட்டணி தர்மத்தை மீறி போட்டியிட்டு வென்றனர். இது எப்படி இருக்கு !!

மனம் நொந்த காம்ரேட், கண்ணீருடன் வெளியேறிய வேட்பாளர். கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சியில் திமுக வெற்றி

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தொண்டையில் சிக்கிக்கொண்ட முள்ளாய் தவிக்கும் கூட்டணிக் கட்சிகள்.

சொந்தக் கட்சியே வைத்த செக் ; விரக்தியில் தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்

மரண பயத்தை காட்டு ; துணைத்தலைவர் பதவியை தூக்கு – திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சித் தேர்தலில் துணைத்தலைவர் பெயராக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் இரண்டு மணி அளவில் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமலோக ஈஸ்வரி வெளியில் வந்து பார்க்கவும் வீட்டின் சுற்றுச் சுவரில் பெட்ரோல் குண்டு வீச்சில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.

இதற்கிடையே, நகராட்சி துணைத் தலைவர் தேர்தலில் ராமலோக ஈஸ்வரி போட்டியிடவில்லை. அப்பதவிக்கு திமுக கவுன்சிலர் ஆர்.எஸ்.பாண்டியன்போட்டியின்றி தேர்வுபெற்றார். முன்னதாக திருத்துறைப்பூண்டி நகராட்சித் தலைவராக தேர்வான திமுகவைச் சேர்ந்த கவிதா பாண்டியன், ஆர்.எஸ்.பாண்டியனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/selvathangam/status/1499664398851674113?s=21