சென்னை மார்ச் 03, 2022

கடந்த 2021 ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக சட்டமன்ற கூட்டதொடர்களை தொலைக்கட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் என உறுதியளித்தார்கள். அதிலும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் சொன்னார்கள் ஆயினும் அவ்வாறு செய்யவில்லை, அதை செய்து தரும்படி அறிக்கை வெளியிட்டு கேள்வி எழுப்பியது மக்கள் நீதி மய்யம்.

மய்யம் தொடர்ந்து அளித்த அழுத்தத்தின் காரணமாக சென்ற சட்டமன்ற கூட்டதொடர்களை குறிப்பிட்ட நேரங்களில் ஒளிபரப்பியது தமிழக அரசு.

அதே போன்று உள்ளாட்சி மன்றங்களில் நடைபெறவிருக்கும் கூட்டதொடர்களையும் அவ்வாறே நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிபடுத்த, வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விவாதித்து திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்தான கவுன்சிலர் விவாதங்கள் இணையதளத்தில் நேரலை செய்யப்படும் என்பது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் பிரதானமான அம்சம்”

மாமன்றத்தில் நடக்கின்ற விவாதங்கள் ஆரோக்கியமானதாக மக்களுக்கு தேவையானவற்றை மட்டுமே பேசுபொருளாக வைக்கிறார்களா எனவும் தெரியவரும்.

நாடாளுமன்ற சட்டமன்ற கூட்டதொடர்களை விட தமது பகுதிகளில் செய்யப்பட வேண்டிய திட்டங்கள் விவாதிக்கப்படுகிறதா என பொதுமக்கள் ஆர்வமாக பார்க்கக்கூடும்.

மிகக் குறிப்பாக ஒவ்வொரு திட்டத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதை அறிவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மேற்பார்வையில் திட்டங்களில் ஊழல் இல்லாதவாறு செயல்படுத்தபடுகிறதா என்பதை மக்களே கண்காணிக்க இது உதவும். மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே ஏரியா சபை அமைக்க மாவட்டங்கள் தோறும் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததன் மூலம், நேரடி ஒளிபரப்பின் பயன் மிக முக்கியமானது.

இந்த நேரடி ஒளிபரப்பானது நாளை நடக்கும் மேயர், துணை மேயர், தலைவர், துணைத்தலைவர் ஆகியோரின் மறைமுக தேர்தலில் இருந்தே துவங்க வேண்டும். இது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்போது இந்த மறைமுக தேர்தலில் குதிரை பேரங்கள் எதுவும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும். ஆகவே எல்லா மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் கவுன்சில் கூட்டங்களை உடனடியாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொள்கிறது

திரு செந்தில் ஆறுமுகம், மாநில செயலாளர்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள 12,819 வார்டு கவுன்சிலர்களையும் நகரப்புற உள்ளாட்சியில் நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்தை மேற்கொண்டு மக்கள் பணியாற்றுங்களென ம.நீ.ம வாழ்த்துகிறது.