சென்னை, மார்ச் 02, 2022

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரையின் போது தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் வாக்களிக்க வேண்டிய பொதுமக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தார். ” எங்களின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பெறும் ஒவ்வொரு வாக்கிற்கும் ஒவ்வொரு மரக்கன்று நடுவோம் அது வெற்றி தோல்வி என எதுவாக இருப்பினும் சரி, மற்ற கட்சிகள் போல் இன்றைக்கு நாங்கள் உங்களுக்கு ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் ஆனால் நாங்கள் நடப்போகும் ஒவ்வொரு மரக்கன்றும் வளர்ந்து உங்களின் பேரன் பேத்திகள் பயன் பெறும் வகையில் இருக்கும்” என்று கோவையில் வாக்குறுதியை அளித்தார்.

தலைவரின் வாக்குப்படி சென்னை மாநகராட்சி 86 ஆவது வார்டில் போட்டியிட்ட திரு சந்திரசேகர் அவர்களுக்கு 299 வாக்குகள் அளித்த நேர்மையான வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதே வார்டில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு துவக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது உடனிருந்து இவ்விழாவினை சிறப்பித்த மய்ய நிர்வாகிகள் மற்றும் உறவுகளுக்கு நன்றி தெரிவித்தார் திரு. சந்திரசேகர் அவர்கள்.

சொல்வதைச் செய்யும் மய்யம்.

https://youtube.com/shorts/QYgw_IjILlU?feature=share