2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வின் முக்கிய வாக்குறுதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று பரப்புரையில் சொல்லப்பட்டது.

அள்ளித் தந்த வாக்குகள் வெற்றியை தரவில்லை மீண்டும் அதிமுக ஆட்சியில் அமர்ந்தது, படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என்றார்கள். அவர்களும் அதைச் செய்யவில்லை.

இடையில் டாஸ்மாக் பற்றி சர்ச்சைகள் எழும்போதெல்லாம் அப்போதைய எதிர்கட்சியாக இருந்த திமுக பேனர்கள் வைத்துக் கொண்டு கருப்புக் கொடி பிடித்து அவரவர் வீடுகளின் வாசலில் கருப்பு உடைகள் அணிந்து எதிர்ப்புகள் தெரிவித்தனர்.
திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் ” தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாகி வருகிறது அதற்கு காரணமாக இருக்கும் மதுக்கடைகள் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒழிக்கப்படும் என்றார். தொடர்ந்து எங்களின் கட்சிப் பிரமுகர்கள் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும்” என்றும் வாக்கு கொடுத்தார்.

https://m.dinakaran.com/article/news-detail/648259

அவை அனைத்தும் காற்றோடு காற்றாய் கரைந்த வார்த்தைகளாக ஆகிப் போனது. சென்ற ஆண்டு 2021 மே மாதம் ஆட்சியமைத்தது திமுக கூட்டணி. தனிப்பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டு ஆட்சி அமைத்தது கண்டு மக்கள் கொஞ்சம் மகிழ்ந்தனர் குடும்பத் தலைவிகள் மற்றும் மகளிர் உள்ளம் பூரித்தனர். ஒரு பெண்ணின் கஷ்டம் இன்னொரு பெண்ணுக்கு தான் தெரியும் எனவே கனிமொழி அவர்கள் சொன்னது போல் மதுக்கடைகள் மூடப்படும் என்று யோசித்துக் கொண்டிருந்தோரின் எண்ணங்களில் பால் வார்த்தது அரசு பார் நடத்துவது சட்டத்தில் இடமில்லை எனவே ஆறு மாத காலத்திற்குள் பார்கள் மூடப் படவேண்டும் என்ற உயர்நீதிமன்றம் நீதிபதி அவர்களின் உத்தரவு.

எவன் எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன என்பதாய் மேற்சொன்ன படி டாஸ்மாக் கடைகள் ஒழியும் என்ற எண்ணங்களில் இடியாய் வந்து இறங்கியிருக்கிறது. டாஸ்மாக் நிர்வாகம் பார்கள் மூடப்பட வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யும்படி மேல் முறையீடு செய்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலானது.

பார்கள் நடத்துவதை விட்டுத்தராத காரணம் என்ன தெரியுமா ? அது ஆயிரம் லட்சம் இல்லை தினமும் தமிழகம் முழுக்க கோடி கோடியாக பணம் கொழிக்கும் தொழிலாக மாறிப்போனது நாள் ஒன்றுக்கு சுமார் 2 கோடிகள் வரை மாமூல் ஆக வந்து விட வேண்டும் என்று வாய் வழி உத்தரவாக உலா வருகிறது. தேன் எடுப்பவன் புறங்கை வழியும் தேன் துளிகளை ருசிக்காமலா இருப்பார்கள். மதுபானம் தயாரிக்கும் ஆலைகள், அதைப் போக்குவரத்து மூலமாக கொண்டு சேர்க்கும் வாகன சேவைகள், டாஸ்மாக் கடைகளில் விற்பனைப் பிரதிநிதிகள், பார் நடத்தும் உள்ளூர் பிரமுகர்கள் என கட்டு கட்டாக கரன்சிகள் தாராளமாக புரளுவதால், ஒருவேளை நீங்கள்
அதைக் கெடுத்துக் கொள்ள விரும்பாத நலம் விரும்பிகள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மறைமுகமாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர் என்பதே நிதர்சனமாக இருக்கும் உண்மை.

இப்போது புரிந்திருக்கும் இது குடியரசு அல்ல : குடி-அரசு என்று.

இதில் மக்கள் நீதி மய்யம் தனது தேர்தல் பரப்புரை செய்யும் போது டாஸ்மாக் கடைகள் பற்றி தலைவர் பேசிய முக்கிய அம்சங்கள்.

இது தான் திமுக வின் இரட்டை நிலை அரசியல்