ஜூன் 22, 2௦23

தமிழக அரசு இன்றைக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எப்போது இது நடைமுறைக்கு வரும் என காத்திருந்த பலருக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அறிவிப்பாக இருக்கிறது என்றால் மிகையாகாது.

பல குடும்பங்களை நடுத்தெருவில் நிற்க வைத்துவிடுகிறது மது அருந்தும் பழக்கம். இன்னும் சொல்லப்போனால் மதுவிற்கு அடிமையாகிப் போனவர்களும் ஏராளம். அதனால் தனது உடல்நலனிலும், மனைவி மற்றும் குழந்தைகளை சரிவர கவனிக்காமல் அவர்களுக்கு தேவையான முறையான நல்ல கல்வி உணவு உடல் ஆரோக்கியம் மற்றும் உடைகள் நல்ல சுத்தமான வாழ்க்கைச் சூழல் என எதையும் கவனிக்காமல் மது ஒன்றே போதும் என சதா சர்வநேரமும் அந்தப் போதையில் மூழ்கிப் போய்விடுவது என பலர் தங்களது வாழ்க்கையை தொலைத்து நிற்பது பல ஆண்டுகளாக வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் 2௦21 ஆண்டில் ஆட்சியேற்ற திமுக அரசு தற்போது தமிழகம் முழுக்க சுமார் 5௦௦ டாஸ்மாக் கடைகளை மூடிவிடுவதாக அறிவித்துள்ளது மிகுந்த வரவேற்பும் மகிழ்ச்சியும் அதே சமயம் கொஞ்சம் மனநிம்மதியை தருவதாக உணர்கிறார்கள் தாய்மார்கள். மக்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்திவரும் மக்கள் நீதி மய்யம் இந்த அறிவிப்பினை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறது மேலும் மது அருந்துவதில் இருந்து நினைத்தாலும் மீள முடியாமல் தவிக்கும் குடிநோயாளிகளுக்கு தகுந்த கைதேர்ந்த துறைசார் வல்லுனர்கள் முறையான மருத்துவர்கள் ஆகியோரை அமர்த்தி தாலுக்கா தோறும் குடிநோயாளிகள் மறுவாழ்வு மையங்கள் அமைத்து அவர்களுக்கு மீண்டும் இச்சமூகத்தில் இழந்த மாண்பையும், மரியாதையையும் மீட்டெடுத்து நல்ல ஊதியம் பெறும்வகையில் அவர்களின் பணி என்னவோ அவற்றில் ஈடுபடுமாறு ஆலோசனைகள் வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் மேன்மையடையும் வகையில் உருவாக்கித் தருமாறு அந்த மையங்கள் செயல்பட வேண்டும் அதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு! தாலுகா தோறும் போதை மீட்பு மற்றும் மது நோயாளிகள் மறுவாழ்வு மையங்கள் அரசு சார்பில் அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் எனும் தமிழக அரசின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது, பாராட்டுகிறது.

#KamalHaasan #MakkalNeedhiMaiam