பெங்களூரு மார்ச் 28, 2022

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலிற் பெரிது

அய்யன் திருவள்ளுவர், திருக்குறள் எண் 103

பொருள் விளக்கம் இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .

கர்நாடக மாநிலம் செவாலியர் டாக்டர் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் 5ம்ஆண்டு விழாவினை முன்னிட்டு பெங்களூர் R.K.S பள்ளி வளாகம் முழுவதும் வர்ணம் பூசி (பெயின்ட்), புனரமைத்து 3 லட்சம் பெறுமானமுள்ள நல உதவிகளை வழங்கிய திரு.சுபாஷ், திரு.சுதன் மற்றும் ஏனைய நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் சார்பாக மக்கள் நீதி மய்யம், துணைத்தலைவர் திரு கோவை தங்கவேலு அவர்கள் தெரிவித்தார்.