சென்னை மார்ச் 23, 2022

கத்தி போய் வாலு வந்தது டும் டும் டும் வாலு போய் கத்தி வந்தது டும் டும் டும் ; சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. ஆயினும் இக்கொடுமையினை கண்டு அழுவதே உண்மை.

ரஷ்யா – உக்ரைன் போர் நடந்து வருவது தெரிந்ததே கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி துவங்கியது முதல் கச்சா எண்ணை விலை பற்றிய எந்த அறிவிப்புகளும் இந்தியாவில் பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட வில்லை. இதனிடையே இந்தியாவில் 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பா ஜ க சத்தமில்லாமல் எந்த முன்னறிவிப்பும் இன்றி சமையல் எரிவாயு சிலிண்டரின் மீது ரூ 50 உயர்த்தி உள்ளது கடும் அதிர்ச்சியினை அளித்துள்ளது.

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னதாக டிசம்பர் 2021 இல் கடைசியாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. அதற்கு பின்னர் இன்றைக்கு சடாரென உயர்த்தியுள்ளது தேர்தலின்போது போது அல்லாமல் தகுந்த சமையம் பார்த்து இந்த அதிரடி விலை உயர்வு மக்களின் வயிற்றை நெருப்பில்லாமல் எரிய வைத்துள்ளது.

கடந்த ஆண்டில் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக சமையல் எரிவாயு விலையில் ரூபாய் 100 தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார் இன்றைய முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் ஆயினும் தமிழக பட்ஜெட் அறிவிப்பில் அது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாதது வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டதற்கு ஈடாகும்.

https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwiyprOp5Nz2AhUgs1YBHaQnD3MQFnoECAQQAQ&url=https%3A%2F%2Fwww.hindutamil.in%2Fnews%2Ftamilnadu%2F644934-subsidy-of-rs-100-for-gas-cylinder.html&usg=AOvVaw0uyDz4Gzk2FemGImc78V-0