சென்னை மார்ச் 27, 2022

5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்த கையோடு மத்திய அரசு சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவைகளின் விலையை உயர்த்தி நாட்டு மக்களின் மனதையும் அவர்களின் வயிற்றிலும் அடித்துள்ளது.

5 மாநில தேர்தலுக்காக சுமார் 137 நாட்களாக விலையை உயர்த்தாமல் அமைதி காத்து வந்த மத்திய அரசு தேர்தல்கள் நடந்து முடிந்த சில நாட்களில் இந்த விலையேற்றத்தை கையில் எடுத்து அன்றாட வாழ்வில் முன்பிருக்கும் சுமையுடன் இன்னும் கொஞ்சம் சுமையை கூட்டி உள்ளது அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலின் இன்னுமொரு முகத்தினை காட்டுகிறது.

கோவிட் தொற்றினால் பெரும்பாலான இல்லங்களில் தலைமையை பறிகொடுத்த நிலையில் அவற்றை கொஞ்சமும் உணராமல் சகட்டுமேனிக்கு அத்தியாவசிய தேவைகளின் விலையை அடிக்கடி உயர்த்திக்கொண்டே போகும் மத்திய அரசு இந்த முறை சொல்லியிருக்கும் காரணம், ரஷியா மற்றும் உக்ரைன் என இருநாடுகளின் இடையில் போர் மூண்டதால் கச்சா எண்ணை வரத்து குறையத் தொடங்கி ஆனால் அதன் விலை பெருகியதாகவும், மேலும் இத்தகைய விலை உயர்வு ஆளும் மத்திய அரசான எங்கள் கைகளில் மற்றும் கட்டுப்பாட்டில் இல்லை எரிபொருள் விலையை நிர்ணயம் செய்வது எண்ணை நிறுவனங்கள் மட்டுமே என கைவிரித்த மத்திய அரசினை கண்டித்தும் கடந்த ஆண்டில் தேர்தல் வாக்குறுதியில் சமையல் எரிவாயு மானியமாக ரூ.100 அளிக்கப்படும் என்று அறிவித்த அறிவிப்பும் கிடப்பில் போடப்பட்டது.

எண்ணை கம்பெனிகளின் எதேச்சதிகார போக்கினை கண்டித்தும், அவற்றை கட்டுபடுத்தாத மத்திய அரசின் மெத்தனப் போக்கினை கண்டித்தும், மக்களின் வருவாயில் எந்த உயர்வும் இன்றி அன்றாட வாழ்கையை சிரமமுடன் நகர்த்தி வரும் பொதுமக்களின் விழிப்புணர்வு வேண்டியும் சென்னை சோளிங்கநல்லூர் அருகே, பள்ளிக்கரணை பகுதி மக்கள் நீதி மய்யம் பிரமுகரும் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திரு ஷங்கர் ரவி அவர்கள் இதைக் கருத்தினில் கொண்டு அயராத முயற்சி மற்றும் தளராத நம்பிக்கையுடன் உடன் நிற்கும் மய்யம் நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்திட வேண்டி முனைப்புடன் ஈடுபட்டுள்ளார், எனவே மய்யம் உறவுகள் கட்சி நிர்வாகிகள் சான்றோர்கள் என அனைவரும் வந்திருந்து ஆர்ப்பாட்டத்தினை நடத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிகழ்வுகளுக்கு உடனிருக்கும் மாவட்டத் துணைச்செயலாளர் திரு பிரவின் அவர்களுக்கு பேரன்பு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் ஷங்கர் ரவி அவர்கள்.

மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரவிருக்கும் மாநில செயலாளர்கள், மாநில இணைச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், துணை மா.செயலாளர்கள், மற்றும் ஒன்றிய, நகர, கிளை ஆகிய நிர்வாகிகள் அனைவரையும் வரவேற்கும் மய்யம் பிரமுகர் ஷங்கர் ரவி.