மதுரை, மார்ச் 28, 2022

கடலில் மீன்பிடி தடை காலம் ஏப்ரல்-15 முதல் ஜூன்-15 வரை என்பது கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் ஆண்டுதோறும் இக்காலகட்டங்களில் தடை போடப்படுகிறது.

ஆனால் இதுபோன்ற தடைகள் உள்ளூர் கண்மாய், ஆற்றுப்படுகைகளில் கிடையாது. ஆயினும் குளங்களில் அவ்வூர் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழ் வருமானால் குறிப்பிட்ட காலங்களில் பொதுவில் ஏலம்/குத்தகைக்கு விடுதல் போன்றவை நடைபெறுவது வழக்கம்.

கோடைகாலம் நெருங்கி வருவது தெரிந்ததே, எங்கும் சுட்டெரிக்கும் வெயில் பாடாய்ப்படுத்தும் இக்காலத்தில் மீன்பிடிக்க ஏதுவாக சட்டவிரோதமான முறையில் கண்மாயில் இருக்கும் நீரை வெளியேற்றிய நபர்களை தட்டிக் கேட்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகி கண்ணன் அவர்கள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோடைநேரத்தில் மீன்பிடிப்பதற்காக கண்மாய் நீரை வெளியேற்றிய சட்டவிரோத செயலைத் தடுத்த மய்யத்தின் மதுரை கிழக்கு மாவட்டம், ஆனையூர் பகுதிசெயலாளர் கண்ணன் அவர்கள் தாக்கப்பட்டதை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதான சட்டநடவடிக்கையை காவல்துறை விரைவுபடுத்த வேண்டும்.

மதுரை கிழக்கு ஆனையூர் பகுதியின் நீராதரமாக விளங்கும் கண்மாயில் மீன் குத்தைகைகாரர்களால் கண்மாய் நீரை மீண்டும் வெளியேற்றியதை கண்டித்து தடுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி ஆனையூர் பகுதி செயலாளர் திரு.கண்ணன் அவர்களை குத்தகைகாரர்கள் மூன்றுபேர்களால் மற்றும் இருபதுபேர்களின் துணையுடன் தாக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டுள்ளார் பணி செய்ய வந்த பொதுப்பணித்துறை ஆரசு அதிகாரி திரு தியாகராஜன் முன்னிலையில் இவ்வித தாக்குதல் நடந்துள்ளது.

https://twitter.com/mnmmdueast/status/1508439010393620480?s=20&t=drxl5gGCXEcBQ9WnucwxHw

துணைத் தலைவர் திரு A.G மௌரியா ஐ பி எஸ் (பணி ஓய்வு)