ஆட்டோ சவாரியோ மீட்டருக்கு மேல ; டாஸ்மாக் கமிஷனோ குவாட்டருக்கு மேல : பங்கு கேட்கும் உபிக்கள்

1983 ஆம் ஆண்டில் எம் ஜி ஆர் தலைமையிலான அதிமுக அரசு டாஸ்மாக் நிறுவனத்தை துவக்கி வைத்து மது விற்பனையை தமிழகம் முழுக்க வியாபிக்க வைத்தது அனைவரும் தெரிந்ததே, ஆனால் அது மொத்தவிற்பனையின் நெறிமுறைப்படுத்தும் ஓர் நிறுவனமாக செயல்படத்துவங்கியது ஆனால் சில்லறை விற்பனையை முன்னெடுக்கவில்லை. மூதறிஞர் ராஜாஜி தலைமையில் தீவிர மதுவிலக்கை 1937 ஆண்டில் இருந்து அமல்படுத்தினார் அன்றிலிருந்து 2001 வரை சில காலங்களில் தவிர பெரும்பாலும் மதுவிலக்கு அமல்படுத்தப்படவில்லை 1971–74, 1983–87, 1990–91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர தமிழகத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. தனி நபர்கள் அரசியல் செல்வாக்கு கொண்டவர்கள் மதுக்கடைகளை ஏலம் எடுத்தனர் தாங்கள் வைத்ததே சட்டம் என்பதாக சிண்டிகேட் வைத்து லாபம் பார்த்தது.

பின்னர் வந்த ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக அரசு நவம்பர் 2003 இல் சட்ட விதிகளில் திருத்தம் செய்து தனியார் மூலம் நடத்தப்பட்ட மதுபானக்கடைகளை நிபந்தனைகள் எதுவுமின்றி மூடிவிட்டு டாஸ்மாக் நிறுவனம் மூலம் சில்லறை விற்பனையில் இறங்கியது. ஆக அரசே முன்னின்று மதுவை அளந்து ஊற்றிக்கொடுத்தது. அதை எதிர்த்த கருணாநிதி பின்பு 2006 இல் தனது தலைமையிலான திமுக அரசில் தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனம் மூலமே சில்லறை விற்பனையை தொடர்ந்தார். இரண்டு கழக அரசுகளுமே தேர்தல் வாக்குறுதிகளாய் அறிவித்த பூரண மதுவிலக்கை பெயரளவில் கூட அமல்படுத்தவில்லை. ஆனால் டெண்டர்கள் விடுத்து பார்களை தனியார் வசம் நடத்திக்கொள்ள அனுமதித்தது. இதற்கிடையில் மதுபானக்கடையில் அரசின் தற்காலிக ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர் துவக்கத்தில் ஒருமாதிரி முகம் சுளித்தவர்கள் பின்னர் அதில் ஈட்டிய வருமானத்தினை அனுபவிக்கத் துவங்கியதும் அத்தொழில் களைகட்டத் தொடங்கியது.

டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 1.57 பெட்டிகள் (மதுபான பாட்டில்கள் அடுக்கப்பட்ட அட்டை பெட்டிகள்) தமிழகம் முழுக்க விற்பனை ஆகிறது. உதாரணமாக ஒரு அட்டைப்பெட்டியில் 48 குவாட்டர் பாட்டில்கள் (அல்லது) 24 ஆப் பாட்டில்கள் (357ml) ((அல்லது) 12 புல் பாட்டில்கள் (750ml) அது மட்டுமில்லாமல் 65,000 பெட்டிகள் பீர் பாட்டில்கள் (10 பாட்டில்கள்) என டாஸ்மாக் விற்பனையாளர் மூலம் விற்கப்படும் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக கணக்கில் வராமல் விற்பனை செய்யப்படுகிறது என்று தோராயமாக கணக்கிட்டால் கூட நாள் ஒன்றுக்கு சுமார் 7.5 கோடிகள் வரை முறைகேடாக பணம் ஈட்டப்படுகிறது, அப்படி என்றால் ஒரு வருடதிற்குண்டான தொகை உங்கள் தலையை கிறு கிறுவென சுற்றச் செய்யும் ஆமாம் ரூ.2677 கோடிகள் வரை அனாயசமாக டாஸ்மாக் கடை ஊழியர்களின் பாக்கெட்டுக்குள் போகிறது (இதில் யார் யார் பங்குதாரர் என்று விசாரித்தால் தெரியவரும்) . ஒருவேளை ஒரு பாட்டில் விற்கும் போது ரூ.5 கூடுதலாக வைத்து விற்றாலும் 1338 கோடிகள் கிடைக்கும்.

இந்த பகல் கொள்ளையை தடுக்க புலனாய்வு, லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாகவும் (DVAC) அவை மட்டுமில்லாமல் பறக்கும் படைகள் மூலமாகவும் இவற்றைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஐந்து முக்கிய நகரங்களில் நிர்வாக அலுவலகங்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது எனவும் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலையிலிருந்து கூடுதலாக ஒரு ரூபாய் அதிகமாக விற்றாலும் கூட 1000 ரூபாய்கள் அபராதமாக விதிக்கபடுவதாக தகவல்கள் இருந்தாலும் இந்த கோடிக்கணக்கான சுருட்டல் என்பது தோலிருக்க சுளை முழுங்குவது போலாகும்.

நட்டத்தில் இயங்குகிறதா டாஸ்மாக் நிறுவனம் ? விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் வகைகள் அதன் கொள்முதல் விலையுடன் ஓர் அட்டவணை உங்கள் பார்வைக்கு

மதுபானம்கொள்முதல் விலைவிற்பனை விலைலாபம்
கிங்பிஷர் பீர்ரூ.56.88ரூ.120ரூ.63.12
பிரிட்டிஷ் எம்பயர் டூபோர்க் கால்ஸ்பர்க்ரூ.64.38ரூ.140ரூ.75.62
கோல்ட் மேக்ஸ் 11000ரூ.54.37ரூ.120ரூ.65.63
எம்.சி. விஎஸ்ஓபிரூ.62.40ரூ.130ரூ.67.760
1848 எக்ஸ்சோரூ.96.05ரூ.180ரூ.83.95
எம்.ஜி.எம் கோல்டுரூ.87.82ரூ.160ரூ.72.18
ஓல்டுமங்க்ரூ.53.60ரூ.100ரூ.46.40

இது ஒருபுறம் இருக்க 10 வருடங்களாக ஆட்சி அதிகாரம் இல்லாமல் இருந்த திமுக வின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலரும் பலவழிகளில் ஓர் புதிய வழியாக தினமும் விற்பனை ஆகும் தொகையில் 1% கமிஷனாக எங்களிடம் தந்து விட வேண்டும் என்று ஓர் கல்லைத் தூக்கிப் போடுகிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட திமுக எம் எல் ஏ அரசகுமார் தம்பி என்று இதுவரை இல்லாத ஒரு புது விதியை போடுவதால் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர் டாஸ்மாக் கடைகள் ஊழியர்கள். அங்கே மொத்தம் 108 கடைகள் உள்ளன உதாரணமாக நாள் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் வரை விற்பனை என்றால் அதில் 2000 ரூபாய் தந்து விட வேண்டும் என்றும் இது தொடர்பாக உங்கள் மேலாளரிடம் தெரிவித்து விட்டதாக கூறும் அவர் தன்னை பி.டி அரச குமாரின் தம்பி என கூறிக் கொள்கிறார்.

https://tamil.news18.com/news/tamil-nadu/tiruvarur-district-tasmac-employees-protest-demanding-job-security-skv-722589.html

முக்கியக் குறிப்பு : மேற்கண்ட இந்த கட்டுரை டாஸ்மாக்கில் நடக்கும் உள்ளடி வேலைகள், விற்பனை தகிடுதத்தங்கள் ஆகியவற்றை விளக்கிசொல்லவே பல விபரங்களை தேடி ஆராய்ந்து தொகுக்கப்பட்டது. அதைத் தவிர்த்து இதில் வேறு எந்த முகாந்திரமோ இல்லை. மக்கள் நீதி மய்யம் மற்றும் மய்யத்தமிழர்கள் ஒரு போதும், மது தயாரிப்பு, மது விற்பனை மற்றும் மது அருந்துதலை ஆதரிப்பதோ அல்லது ஊக்கப்படுத்துவதும் இல்லை. புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் ஆகியனவும் மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்பதில் உறுதியாக இருக்கிறது.