பொய்யான வாக்குறுதிகளை அளித்து தங்கள் வாக்குகளை அறுவடை செய்திருப்பதாக, தமிழக மக்களைப் போலவே போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பணியாளர்களும் உணர்கிறார்கள்.

அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் தீர்ப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக 300 நாட்களைக் கடந்த பின்னரும் கண்டுகொள்ளவில்லை. அது அதிருப்தியில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு களும் போராட்டத்தில் இறங்கினார். திமுகவின் சொந்த தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அதிமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக பேசுவதும், ஆளுங்கட்சியின் பின் சென்ற அதிமுக அரசு எடுத்த அதே நிலைப்பாட்டை தொடர்வதும் என்பது திமுக அளித்த தேர்தல் அறிக்கைகளை மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்குகிறது. போக்குவரத்துக்கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது என மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் R.தங்கவேலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.