உத்தரபிரதேசம் ஏப்ரல் 29, 2022

நாடெங்கிலும் பெருவாரியாக பேசப்பட்டாலும் இந்தி மொழி தேசிய மொழியல்ல என்பதை மதவாத அரசியல் செய்து கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி என்றைக்கு உணருமோ ?

ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் பெரும்பான்மையாக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று வருவதனால் தாம் தான் இந்த இந்திய நாட்டின் ஏகபோக அதிபதி என்பாகவும் துளியும் இது ஜனநாயகத்தை கையில் கொண்டு திகழ்ந்து வரும் நாடு என்பதை மறந்துவிட்டு இப்படி ஏதாவது வரைமுறையற்ற அறிவிப்புகளையும் கருத்துகளையும் உதிர்த்துக் கொண்டு வருகிறார்கள் பாஜகவினர் மற்றும் உயர்மட்ட அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும்.

பரந்து விரிந்திருக்கும் இந்த தேசத்தில் பல நூற்றாண்டுகளாய் பல மொழிகள் பேசப்பட்டும் அதன் வரிவடிவமான எழுத்தாகவும் விளங்கி வருகிறது. அதிலும் சில செம்மொழி அந்தஸ்தும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்றிரண்டு பேசப்படும் மொழிகளில் வரிவடிவமான எழுத்தும் இல்லாமல் இருக்கிறது.

இன்ன மொழி தான் பேச வேண்டும் இன்ன மொழி தான் பயில வேண்டும் என பாஜக அரசுகள் அது மாநிலங்களில் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டிய மத்திய அரசின் அமைச்சர்களும் அவ்வாறே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் முன்னுக்கு பின் முரணாக பேசி சர்ச்சையை உண்டாக்குவது இதற்கு முன்னர் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமை செய்து ஆட்சி புரிந்த போதிருந்த அடக்குமுறைகளும் மேற்கத்திய நாடுகளில் இருந்த ஏகாதிபத்திய ஆட்சிமுறைகளுக்கு சற்றும் சளைத்ததல்ல என்றே தோன்றுகிறது.

தாய்மொழி என்பது அவரவர் உரிமை மற்றும் அவரவர் பெருமை, இதில் தலையிட எவர்க்கும் அதிகாரமும் கிடையாது உரிமையும் கிடையாது.

https://www.puthiyathalaimurai.com/newsview/55285/kamalhassan-speech-about-hindi-and-pon-rathakrishnan

https://www.updatenews360.com/trending/kamal-haasan-comment-about-national-language-201021/