தமிழகமெங்கும் ஏப்ரல் 09, 2022

காரண காரியங்களுக்காக தனிப்பட்ட நபர்கள் காத்துகிடந்து வேண்டியதை செய்ய முனையலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் அப்படிச் செய்வதில் அர்த்தமென்ன ?

இந்தக் கேள்விகளுக்கு விடையை சமீப காலங்களில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் உயர்த்திய மத்திய அரசின் செயல் நம்மை மலைக்க வைக்கிறது.

இதற்கும் முன்னர் கடந்த மாதத்தில் நடந்து முடிந்த 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்வை வைத்து ஒன்றிணைத்து பார்த்தீர்கள் ஆனால் தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்த சில நாளில் அமல்படுத்தப்பட்டது என்பது பட்டவர்த்தமான வெளிச்சம்.

சரி இங்கே நம்ம மாநிலம் தமிழக அரசிடம் வருவோம், தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டது யாதெனில் 2020 ஆம் ஆண்டின் துவக்கத்தின் முதலில் இருந்து வரும் கொரொனோ தொற்றினால் நிலவி வரும் மந்தமான பொருளாதார காலங்கள் அகன்று முன்பு போலவோ அல்லது அதற்கு மேம்பட்டதாக நமது பொருளாதார வசதிகள் உயர்ப்பெற்ற பின்னரே சொத்துக்கள் மீதான வரிகளை உயர்த்த முடியும் எனவும் அதுவரை வரிகளை உயர்த்த மாட்டோம் என தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி காற்றில் போனது. அதன் காரணாமாக ஆளும் திமுக அரசு சொல்வது மத்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக மட்டுமே தற்போது சொத்துவரிகள் உயர்த்தபட்டுள்ளது என சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா அடிபட்ட இடத்தில மிளகாய்த்தூள் தூவியது போல இருக்கிறது.

எனவே மத்திய மாநில அரசுகள் அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க முன்வராமல் அவர்களின் பாக்கெட்களில் இருந்து நேரிடையாக அழுத்தம் தந்து பணம் பறிப்பதற்கு ஈடாக மட்டுமே கொள்ள முடியும்.

சென்ற ஆண்டில் மக்களுக்காக மக்கள் நீதி மய்யம் ஏணி போராட்டம் என்பதை முன்னெடுத்த நிகழ்வு போன்றே இந்த போராட்டத்தினை முன்னெடுத்து அதை தமிழகம் எங்கும் முழு வேகத்தில் பெருந்திரளாக கூடி தங்களின் எதிர்ப்பை பல வழிகளில் நூதனமான முறையிலும் அழுத்தந்திருத்தமாக பதிவு செய்துள்ளனர் என்றால் மிகையாகாது. தமிழகத்தின் தலைநகரான சென்னை துவங்கி மொத்தம் 38 மாவட்டங்களிலும் மட்டுமல்லாது யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர், மாநில செயலாளர்கள், மாநில அணி செயலாளர்கள், மகளிர், மாணவர், விவசாய, ஊடக அணி செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள், தொழில் முனைவோர் அணிகளின் நிர்வாகிகள், நற்பணி இயக்க நிர்வாகிகள், தொழிற்சங்க அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கட்டமைப்பு சார்ந்த நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் என அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பியும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்திக்கொண்டு அவை மட்டுமில்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறுதிச்சடங்கு செய்வது போல் மூங்கில் பாடைகளில் வைத்தபடி ஊர்வலமாக சென்றனர். இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு அதனைச் சுற்றி மகளிரும் ஆடவரும் ஒப்பாரி வைத்த நூதனமான போராட்டங்களும் நடைபெற்றது கவனிக்கத்தக்கது.

https://twitter.com/FoodkingSarath/status/1512803874792361987?s=20&t=HsOy17SDG5DBaVnqdHLfcw

மாற்றுக் கட்சியினரும் மக்கள் நீதி மய்யம் போராட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.