சென்னை

இத்தனை வருடங்களாக தள்ளிப் போடப்பட்டு இருந்த உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டு அதில் அதிகப் பெரும்பான்மையாக திமுக கூட்டணி கைப்பற்றியது தெரிந்ததே.

தமிழக முதல்வர் ஊராட்சி நகராட்சி மன்றங்களின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியிருந்தாலும் அதிலும் தங்களின் அதிகார தோரணையும் பணபலத்தையும் கொண்டு அத்தைகைய பதவிகளையும் குறிவைத்து போட்டியிட்டு தக்க வைத்துக் கொண்டனர் பெரும்பாலான திமுக பிரமுகர்கள் அதற்கென கைமாறாக பெரும் தொகைகள் கைமாறியதாக பேச்சுக்கள் வந்தவண்ணம் உள்ளது வெட்டவெளிச்சம். எனினும் அவ்வாறு கூட்டணிக் காட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளை கைப்பற்றிய திமுகவினர் உடனடியாக விலகி தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்ட முதல்வரையும் பொருட்படுத்தாமல் இருக்கும் நிகழ்வும் நடந்து வருகிறது அதுவும் நாம் அனைவரும் அறிந்ததே.

இவற்றுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக வார்டுகளில் கவுன்சிலர்களாக ஜெயித்த ஆண் பிரமுகர்களாகட்டும் பெண் உறுப்பினர்களாகட்டும் சகட்டு மேனிக்கு வசூல் வேட்டையில் இறங்கி உள்ளது கண்கூடாக தெரிகிறது.

சில நாட்களுக்கு முன்னர் சென்னையின் 3 ஆவது வட்ட பெண் கவுன்சிலரின் கணவர் வீடு கட்டவிருக்கும் அப்பகுதியை பெண்மணி ஒருவரிடம் பணம் கேட்டதாகவும் அது தொடர்பான வாக்குவாதத்தின் போது எடுத்த வீடியோ காட்சிகள் தொலைகாட்சிகளில் மற்றும் அணைத்து ஊடகங்களில் வெளியாகி வைரல் ஆனது தொடர்ந்து அதே போன்று சென்னையின் இன்னுமொரு பெண் கவுன்சிலரின் கணவரும் அவ்வாறான ஓர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் அவர்களது பணியைச் செய்யவிடாமல் இடையூறு செய்தும் அவரை ஆபாசமாக பேசியும் இருந்ததும் அது தொடர்பாக மேலும் அக்காவலரிடம் நான் யாரு தெரியுமா கவுன்சிலரின் புருஷன் எனும் ரீதியாக பேசியதும் தற்போது சர்ச்சையாகி அந்த வீடியோவும் வைரலாகி போனது.

பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட வார்டுகளில் தங்கள் குடும்பத்தினர் ஆன மனைவி, தாய் மற்றும் இன்ன பிற உறவு முறையிலுள்ளவர்களை போட்டியிட்டு ஜெயிக்க வைத்த பின்னர் அவர்கள் முறையற்ற வகையில் ஓட்டுக்கு பணம் பொருள் செலவு செய்த காரணத்தினால் அதை மீண்டும் சம்பாதிக்கும் வகையில் அவர்களின் பதவியை தனக்கு கேடையமாக வைத்துக் கொண்டு அதிகாரத் தோரணையில் வசூல் வேட்டையில் இறங்கிவிட்டனர் என்றால் அதில் எள்ளளவும் பொய் இல்லை. பெயரளவில் மற்றும் கோப்புகளில் கையெழுத்து போடவும் மட்டுமே பெண் கவுன்சிலர்கள் ஆட்டிவைக்கப்படுகிறார்கள். இவர்களின் பின்னால் இருந்து நிழல் கவுன்சிலர்களாக செயல்படுவது ஆண் பிரமுகர்கள்மட்டுமே.

இதை விடியல் என்று சொல்வது உண்மை தான் ஆனால் விடிந்தது என்னவோ அதிகாரமும் அராஜகமும் தமது கைகளில் வைத்துக்கொண்டிருக்கும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே.

இனியாவது தமிழக மக்கள் தங்களை தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டு உண்மைக்கு புறம்பாக இல்லாமல் மக்களுக்கு நன்மை பயக்க கூடிய வகையில் உழைக்கும் நல்ல மனிதர்களை தேர்வு செய்வதே இதற்கு தீர்வாகும். நாளை நமதே.

https://youtube.com/shorts/KeyFAbRl3YE?feature=share