கடலூர் மே 20, 2022

தமிழக அரசின் சார்பில் 2021 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 23 ஆவது தேதி விவசாயிகளுக்கு 1 லட்சம் மின்சார இணைப்புகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

2021 மார்ச் 31 நிலவரப்படி பல்வேறு பிரிவுகளில் சுமார் 4.52 லட்சம் விவசாயிகள் செய்திருந்த விண்ணப்பம் செய்து அவை நிலுவையில் இருந்தன.

பின்னர் மே 2021 இல் ஆட்சி பொறுப்பை கைப்பற்றிய திமுக மேற்கண்ட மின்சாரம் வழங்கும் துரிதமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் கடந்த அதிமுக ஆட்சியில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 22100 மின்சார இணைப்புகள் மட்டுமே தரப்பட்டதாக தெரிய வருகிறது.

ஆனால் தற்போது மின் இணைப்பு கிடைக்கப் பெறாத தகவல் வந்ததும் உடனடியாக அந்தக் குறையை போக்கும் வண்ணம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஓராண்டு முன்னதாகவே மின் இணைப்புகள் வழங்கப்பட்டன என சென்னையில் ulla மின்சார துறையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் தெரிவித்தார்.

ஆனால் தற்போது கடலூர் மாவட்டத்தில் மே 20 ஆம் தேதியன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கடலூர் விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பல விவசாயிகள் அரசு இதுவரை அரசு அறிவித்த மின்சார வழங்குதல் திட்டம் எங்கள் பகுதிகளில் இன்னும் வழங்கப்படவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

அவை மட்டுமல்லாது இன்னும் பல சிரமங்களை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் ஸ்டாளின் அவர்கள் ஆக, இது கலைஞர் அவர்களின் ஆட்சி முறையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி என்று பெருமை கொள்ள பேசினார்.

ஆனால் கடலூர் மாவட்ட விவசாயிகளின் குமுறல் வேறு விதமாக ஒலிக்கிறது.

ஏட்டில் எழுதி எண்ணிக்கையை கூட்டிச் சொல்லி ஓட்டுக்களை வாங்கிட மட்டுமே இவர்களின் பேச்சுத் திறமை.