ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு

மு வரதராசன் தெளிவுரை : வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த மன்னர்கள் கடையேழு வள்ளல்கள் என்ற வரலாறாக இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கு பிற்பாடு எவ்வளவோ வள்ளல்கள் தங்களால் இவ்வுலகு அதனில் வாழும் மக்கள் பயனுற வேண்டும் என்று தனக்கு இல்லாமல் போனாலும் எனும் கவலையோ அல்லது கொடுத்தால் நாளை வேறு எந்த வகையிலாவது திரும்ப வரும் என எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அள்ளித்தரும் வள்ளல்கள் இருந்து வந்தார்கள். அதில் ஒருவர் தான் கடின உழைப்பை தந்து தம் வாழ்வினை நிலையாக்கிட துவங்கிடும் போதினில் இருந்தே இன்றுவரை ஈட்டும் பொருளில் இருந்து எடுத்துத் தந்து வரும் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் வெள்ளைமனம் அள்ளித் தந்த நன்கொடைகள் பற்றிய விபரங்கள் (தொகுப்பு) இதோ உங்களின் பார்வைக்கு.

நன்கொடைகள் மட்டுமல்லாது தமிழகத்தில், இந்தியா முழுமைக்கும் நடந்த அரசியல் நிகழ்வுகளில், மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளில், சாதி மதம் சார்ந்து நடந்த கொடுமைகளில் பிரிவினைகளில் உண்டான சர்ச்சைகளை, ஒற்றுமையை குலைக்கும் தீய செயல்களை கண்டித்து குரல் எழுப்பவும் தவறவில்லை.

மிக முக்கியமான தகவல்களையும் அதற்கான தரவுகளையும் தேடிப்பிடித்து அதை ஆவணமாக்கி வைத்திட உதவும் அன்பு உறவுகளுக்கு தமது உளமார்ந்த வாழ்த்துகளை மய்யத்தமிழர்கள் தெரிவித்துக் கொள்கிறது. இன்னும் கூடுதலான தகவல்கள் இருப்பின் தாராளமாக தொடர்பு கொள்ளலாம். ஏன் என்றால் அரசியலில் நுழைந்து இருக்கும் கமல்ஹாசன் இதற்குமுன்னர் மக்களுக்காக என்ன செய்துவிட்டார் என அறியாமல் கேட்கும் நபர்களுக்கு இந்த தரவுகளே சாட்சி.

தலைவர் அவர்கள் நிறைகுடம் : தலைவரை குறை கூறும் சிலர்/பலர் குறைகுடம், கூத்தாடுவது என்றும் குறைகுடமே என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமென அவசியமில்லை.

நம்மவர் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் வழியில் ரசிகர்களும் அரசியல் கட்சி துவங்கியதும் அதன் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் நற்பணிகளை தொடர்ந்து செய்து வருவதை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா : இதுவரை தந்த வாக்குகள் விழலுக்கு இறைத்த நீராய் போனது. மீண்டும் மீண்டும் சுரண்டும் எண்ணம் கொண்டோர்களே ஆட்சிக்கு அதிகாரம் கைப்பற்றி பேருக்கு சில நன்மைகள் செய்துவிட்டு அள்ளி அள்ளி சொல்லியதில் சிலதை மட்டுமே கிள்ளிச் செய்துவிட்டு தம்பட்டம் அடிக்கும் நிலை இனி வேண்டாம் என்றால் நீங்கள் நாட வேண்டியது மக்கள் நீதி மய்யம் மட்டுமே.

ஏன் எனில்

நம் தமிழக மக்கள் இனம் மதம் சாதி கடந்து யாவரும் எம் மக்களே எனும் தலைவர் கமல்ஹாசனின் உயிரே ! உறவே ! தமிழே !