சென்னை மே 1, 2022

விளையாட்டு உடலளவில் வலுவினைத் தரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே அதுமட்டுமில்லாமல் மனதிற்கு உத்வேகத்தையும் தன்னம்பிக்கையும் தரக்கூடிய வலிமை விளையாட்டுக்கு உள்ளது.

மக்களுக்கான ஆரோக்கிய அரசியலை முன்னெடுப்பதில் மட்டும் நின்றுவிடாமல் இளையோர்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் விளையாட்டையும் ஊக்கப்படுத்தி அதற்கான களத்தினை அமைத்துத் தருவதில் சிறப்புற விளங்கி வரும் மக்கள் நீதி மய்யம். வேளச்சேரி பகுதி மய்யம் கால்பந்தாட்ட போட்டிகளை இன்று சிறப்பாக நடத்தியது.

16 அணிகள் மோதிய கால்பந்தாட்ட போட்டிகள் இன்று காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை சென்னை ஆதம்பாக்கம் சாஸ்திரி நகர் 3 ஆவது தெருவில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் வேளச்சேரி பகுதி மக்கள் நீதி மய்யம் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டது.