சென்னை ஏப்ரல் 29, 2022

சுட்டெரிக்கும் வெயில் துவங்கி விட்டது, வீசும் காற்றும் தகிக்கும் நெருப்பு போல் கொதிக்கிறது. வாகன ஓட்டிகள் முகங்களில் பட்டுத் தெறிக்கும் அனல்காற்று பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

அப்படியும் வாகனங்கள் இயக்கம் போது அவ்வாறான அனல்காற்று வீசுவதையும் ஓரளவு பொறுத்துக்கொள்ள இயலும். நகரங்களில் சாலைகளில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் முக்கியச் சாலை சந்திப்புகளில் மற்றும் நீண்ட சாலைகளில் சிக்னல்களில் நிற்க வேண்டிய அவசியம் இருக்கும்போது நேரிடையாக படும் வெயிலின் தாக்கத்தின் போது உண்டாகும் எரிச்சல் சொல்லி மாளாது. அப்படி நிரகவேண்டிய சூழல்களில் தற்காலிக நிழல் பந்தல்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தந்திருக்கிறார். அவ்வாறான தற்காலிக பந்தல்களை நிர்மானித்தல் இருசக்கர வாகன ஓட்டிகளின் சிக்னல்களில் காத்து நிற்கும்போது ஏற்படும் சிரமத்தினை தவிர்க்க ஏதுவாகும்.

வெயில் கொளுத்துகிறது. சிக்னல்களில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். அவர்கள் சற்றே இளைப்பாற போக்குவரத்து சிக்னலுக்கு அருகே இதுபோன்ற தற்காலிக நிழல் பந்தல்கள் அமைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.” – கமல்ஹாசன், தலைவர்