நெல்லை மே 16, 2022
இயற்கையை சுரண்டி அண்டிப்பிழைக்க மறக்காத ஒவ்வொரு தொழிலதிபரும் தண்டிக்கபடவேண்டியவர்கள். அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட விதிகளை மீறி இன்னும் இன்னும் என ஆழமாக ஊடுருவி மலைகளைக் குடைந்து சரிந்து அதில் சிக்கிய கல்குவாரி தொழிலாளர்கள் தங்கள் வயிற்றுப்பிழைப்பிற்கு உடலுழைப்பைத் தந்த அந்த தொழிலாளிகள் குவாரி முதலாளியின் பணப்பசிக்கு தங்கள் உயிரையும் தந்து மாண்டு போயிருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் இயங்கிவந்த கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் மரணமடைந்துள்ளார் இன்னும் மூவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக வரும் தகவல் வேதனையைத் தருகிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று விசாரணை செய்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டியது முக்கியமானது. விதிகளை மீறி இரவு நேரங்களில் அந்த குவாரி செயல்படுவது என்றும் வெளியாகி உள்ள தகவல்கள் இன்னும் அச்சத்தை உண்டாக்கி வருகிறது.
மீட்பு பணிகள் விரைவுபடுத்தி இன்னும் எவரேனும் சிக்கியுள்ளனரா என கவனமாக அதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் மேற்சொன்னவாறு அனுமதிக்கப்பட்ட அளவீடுகளை விட விதிகளை மீறி அதிகமான ஆழம் தோண்டப்பட்டுள்ளதா எனவும் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் மக்கள் நீதி மய்யம் மற்றொரு கேள்வியை முன் வைக்கிறது தகுந்த பாதுகாப்பில்லாமல் தொழிலாளிகளை இப்படி அபாயகரமான பணிகளில் ஈடுபடுத்தி வருவதும் அதனால் இன்னும் எத்தனை உயிர்களை இழக்க வேண்டி வரும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
முக்கியச் செய்தி : கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தைப் பற்றி வெளியாகும் தகவல்கள் என்னவென்றால் சுமார் 300 அடிகள் அல்லது அதற்கும் மேலாக தோண்டப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.